/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நெல்லிக்குப்பம் நகரமன்ற தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., - தி.மு.க., - ம.தி.மு.க., மனு தாக்கல்நெல்லிக்குப்பம் நகரமன்ற தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., - தி.மு.க., - ம.தி.மு.க., மனு தாக்கல்
நெல்லிக்குப்பம் நகரமன்ற தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., - தி.மு.க., - ம.தி.மு.க., மனு தாக்கல்
நெல்லிக்குப்பம் நகரமன்ற தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., - தி.மு.க., - ம.தி.மு.க., மனு தாக்கல்
நெல்லிக்குப்பம் நகரமன்ற தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., - தி.மு.க., - ம.தி.மு.க., மனு தாக்கல்
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகரமன்றத் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., - தி.மு.க., - ம.தி.மு.க., வேட்பாளர் கள் மனு தாக்கல் செய்தனர்.
மனு தாக்கலுக்குப் பின்னர் அமைச்சர் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சி பதவிகள் அனைத்தையும் அ.தி.மு.க., வெற்றி பெறும் நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் பஸ் நிலையம், குப்பையில் இருந்து உரம் தயாரிப்பது, சுகாதார வளாகம் என பல பணிகள் நடந்தது. தி.மு.க., ஆட்சியில் அத்திட்டங்கள் செயல்படாமல் முடங்கின. செயல்படாத அத்திட்டங்கள் செயல்படவும் கூடுதல் திட்டங்கள் வரவும் மக்கள் அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரிக்க வேண்டும். மாநிலத்திலேயே முதன்மை நகராட்சியாக உயர்த்த பாடுபடுவோம். இவ்வாறு அமைச்சர் சம்பத் கூறினார். தி.மு.க.,: நெல்லிக்குப்பம் நகரமன்ற தலைவர் பதவி தி.மு.க., வேட்பாளர் புகழேந்தி முன்னாள் எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார். ம.தி.மு.க.,: நெல்லிக்குப்பம் நகரமன்ற தலைவர் பதவிக்கு ம.தி.மு.க., சார்பில் போட்டியிடும் பாலன் மாவட்ட பொருளாளர் வேலு முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.