/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/சிறையில் உயிருக்கு பாதுகாப்பில்லை கருப்பசாமிபாண்டியன் புலம்பல்சிறையில் உயிருக்கு பாதுகாப்பில்லை கருப்பசாமிபாண்டியன் புலம்பல்
சிறையில் உயிருக்கு பாதுகாப்பில்லை கருப்பசாமிபாண்டியன் புலம்பல்
சிறையில் உயிருக்கு பாதுகாப்பில்லை கருப்பசாமிபாண்டியன் புலம்பல்
சிறையில் உயிருக்கு பாதுகாப்பில்லை கருப்பசாமிபாண்டியன் புலம்பல்
ADDED : செப் 19, 2011 11:55 PM
திருநெல்வேலி : ''பாளையங்கோட்டை மத்திய சிறையில் எனது உயிருக்கு பாதுகாப்பில்லை,'' என நெல்லை மாவட்ட தி.மு.க., செயலாளர் கருப்பசாமிபாண்டியன் தெரிவித்தார்.
கருப்பசாமிபாண்டியன் நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஜெயா 'டிவி' நிருபரை மிரட்டியதாகவும், மேலும், ஒரு நில மோசடி வழக்கிலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை போலீஸ் காவலில் விடக்கோரிய மனு மீதான விசாரணை மேற்கொண்ட மாஜிஸ்திரேட் ராபின்சன் ஜார்ஜ்,
நாளை மீண்டும் விசாரிப்பதாக தெரிவித்தார். ஜாமின் மீதான விசாரணை செப்., 21ல் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். கோர்ட் வளாகத்தில் கருப்பசாமிபாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: எனக்கு ஏற்கனவே சிக்கன்குனியா பாதிப்பு இருந்தது. இதற்காக மாதக்கணக்கில்சிகிச்சை எடுத்துக்கொண்டேன். எனக்கு தொடர்பில்லாத நிலமோசடி வழக்கில் கைது செய்துள்ளனர். வேண்டுமென்றே மதுரை சிறையில் தனிமைஅறையில் அடைத்தனர். தற்போது எனக்கு உடல் நிலை மிகவும்பாதிப்படைந்துள்ளது. சிறையில் எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை. ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அரசும், போலீசும்தான் பொறுப்பாவார்கள், என்றார்.


