/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/லாரி டிரைவரை தாக்கிய பிரபல ரவுடி பாஸ்கர் கைதுலாரி டிரைவரை தாக்கிய பிரபல ரவுடி பாஸ்கர் கைது
லாரி டிரைவரை தாக்கிய பிரபல ரவுடி பாஸ்கர் கைது
லாரி டிரைவரை தாக்கிய பிரபல ரவுடி பாஸ்கர் கைது
லாரி டிரைவரை தாக்கிய பிரபல ரவுடி பாஸ்கர் கைது
ADDED : ஜூலை 25, 2011 12:30 AM
திண்டிவனம் : திண்டிவனம் அருகே நள்ளிரவில் லாரி டிரைவரை தாக்கிய பிரபல ரவுடி ஆட்டோ பாஸ்கரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் கிடங்கல்-2 பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ பாஸ்கர், 33. பிரபல ரவடியான இவர் மீது அடிதடி, கொலை மிரட்டல், பெண்ணை பலாத்காரம் செய்தது உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. நேற்று முன்தினம் ஆட்டோ பாஸ்கர் திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டையில் குடிபோதையில் இருந்துள்ளார். இந்நிலையில் திண்டிவனம் வள்ளலார் நகரைச் சேர்ந்த லாரி டிரைவர் உதயக்குமார்,45 என்பவர் நள்ளிரவு 12.30 மணிக்கு வாசு என்ற மாற்று டிரைவரைத்தேடி ஜக்காம்பேட்டை சென்றுள்ளார்.
ஆட்டோ பாஸ்கர் தங்கியிருந்த வீட்டிற்கு அருகே நின்று அவ்வழியே சென்ற ஒரு முதியவரிடம் டிரைவர் வாசு வீடு குறித்து விசாரித்துள்ளார். அப்போது வீட்டைவிட்டு வெளியே வந்த ஆட்டோ பாஸ்கர் உதயக்குமாரை திட்டியுள்ளார். இதில் இவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ஆட்டோ பாஸ்கர் இரும்பு பைப்பால் உதயக் குமாரை தாக்கியுள் ளார். இதில் இடது கை முறிந்து பலத்தகாயடைந்த உதயக்குமார் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து உதயக்குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து ஆட்டோ பாஸ்கரை கைது செய்தனர்.