Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/இறால் பண்ணைகளை ஊக்குவிக்க வாய்ப்பில்லை

இறால் பண்ணைகளை ஊக்குவிக்க வாய்ப்பில்லை

இறால் பண்ணைகளை ஊக்குவிக்க வாய்ப்பில்லை

இறால் பண்ணைகளை ஊக்குவிக்க வாய்ப்பில்லை

ADDED : ஆக 12, 2011 01:59 AM


Google News
சென்னை: ''இறால் பண்ணைகளை ஊக்குவிப்பதால், விளைநிலங்கள் உப்பு நீராகி சொந்த நிலங்கள் அழியும் ஆபத்து ஏற்படும்,'' என்று சட்டசபையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பட்ஜெட் மீது சட்டசபையில் நடந்த விவாதம்:என்.ஆர்.ரங்கராஜன் - காங்கிரஸ் : வருவாய் துறையில் ஆட்கள் குறைவாக உள்ளனர். ஆனால், இந்த துறையினர் தான், ரேஷன் கார்டு ஆய்வு முதல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த பயன்படுத்தப்படுகின்றனர். எனவே, வருவாய்த் துறையில் உள்ள இடங்களை நிரப்பினால், அனைத்து திட்டங்களும் மக்களை சென்றடையும்.நகராட்சி பகுதிகளில், போக்குவரத்து போலீசார் மிகக் குறைந்த அளவில் உள்ளனர். தினமும், வாகன எண்ணிக்கை பெருகி வருவதால், போக்குவரத்து போலீசார் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தென்னை விவசாயிகள் பற்றிய அறிவிப்பு ஏதும் இல்லை.1983ம் ஆண்டும் தேங்காய் 2.50 ரூபாய், இந்த ஆண்டும் அதே விலை தான். சத்துணவில் வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை, இளநீர் கொடுத்தால் நல்லது. தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் இறால் பண்ணை மூலம், ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. அந்த தொழிலை ஊக்குவிக்க வேண்டும்.பாலகிருஷ்ணன் - மார்க்சிஸ்ட் : இறால் பண்ணை மூலம் ஏற்றுமதி அதிகரித்து, அதிக வருவாய் கிடைக்கலாம். ஆனால், நமது நாட்டில் ஏற்பட்ட அனுபவம், இறால் பண்ணையால், பல லட்சம் ஏக்கர் நிலம் உப்பு நீராக மாறி, பலனற்று போகும் நிலை ஏற்பட்டது. தஞ்சை, திருவாரூர் பகுதியில் வெள்ள நீர் வெளியேற முடியாத

அளவுக்கு, இறால் பண்ணைகளால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே, இந்த பண்ணைகளை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளோம். அப்படி ஒன்றும் இந்த தொழிலில் பெரிய வருமானம் கிடையாது.ஏற்றுமதி வாய்ப்பு என்பதற்காக, சொந்த நிலத்தை அழிக்கக் கூடாது.கிருஷ்ணசாமி - புதிய தமிழகம் : இறால் பண்ணைகளால், விளை நிலங்களில் உப்பு நீர் கலந்து விடுகிறது. கடலில் இருந்து 15 கி.மீ., வரை நிலம் உப்பு நீராகிறது. இறால் பண்ணைகளை எக்காரணம் கொண்டும் ஊக்குவிக்கக் கூடாது.ரங்கராஜன் : இந்த தொழிலை நடத்துவோர் பெரிய நிறுவனங்கள் அல்ல. சிறிய விவசாயிகள் ஒன்று சேர்ந்து, தங்களது சொந்த நிலத்தில் பண்ணை அமைக்கின்றனர். இதில் உள்ள குறைபாடுகளை அரசு ஆய்வு செய்து, இத்தொழிலை ஊக்குவிக்க வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us