/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நல்லட்டிபாளையத்தில் குடும்ப நல முகாம்நல்லட்டிபாளையத்தில் குடும்ப நல முகாம்
நல்லட்டிபாளையத்தில் குடும்ப நல முகாம்
நல்லட்டிபாளையத்தில் குடும்ப நல முகாம்
நல்லட்டிபாளையத்தில் குடும்ப நல முகாம்
ADDED : ஆக 25, 2011 11:36 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அரசு மருத்துவமனை சார்பில் மாதத்திற்கு ஐந்து முறை
குடும்ப நல அறுவை சிகிச்சை (லேப்ராஸ்கோபிக்) முகாம் நடந்து வருகிறது.
இதன்படி இன்று (26ம் தேதி) நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில்
முகாம் நடக்கிறது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:
குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பெண்களுக்கு கீழ் கண்ட தகுதிகள்
இருத்தல் அவசியமாக கருதப்படுகிறது. அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்
பெண்களுக்கு பிரசவம் முடிந்து 100 நாட்கள் கழிந்திருக்க வேண்டும். ரத்த
சோகை இருக்கக்கூடாது. ரத்தக்கொதிப்பு, வலிப்பு நோய், சர்க்கரை நோய்
உள்ளவர்கள் இந்த சிகிச்சை மேற்கொள்ளக்கூடாது. குழந்தைக்கு ஒரு வயது
நிரம்பி, குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருத்தல் அவசியம். இதற்கு முன்
அறுவை சிகிச்சை செய்தவர்கள் இச்சிகிச்சை செய்து கொள்ளக் கூடாது.
கருக்கலைப்பு செய்திருந்தால் அடுத்த மாதம் மாதவிடாய் ஆன பிறகே இந்த
சிகிச்சை மேற்கொள்ள முடியும். மாதவிலக்கு தொடங்கி மூன்று நாள் முதல் ஐந்து
நாட்கள் முடிந்திருக்க வேண்டும். மேல்கண்ட தகுதிகள் இருந்தால் அவர்கள்
முகாமில் பங்கேற்கலாம் என்றனர்.