எலான் மஸ்க், சத்யா நாதெள்ளா, சுந்தர் பிச்சை, மெலானியா... 'எச்1பி' விசா பயனாளிகள் பட்டியல் இதோ!
எலான் மஸ்க், சத்யா நாதெள்ளா, சுந்தர் பிச்சை, மெலானியா... 'எச்1பி' விசா பயனாளிகள் பட்டியல் இதோ!
எலான் மஸ்க், சத்யா நாதெள்ளா, சுந்தர் பிச்சை, மெலானியா... 'எச்1பி' விசா பயனாளிகள் பட்டியல் இதோ!

வாஷிங்டன்: 'எச்1பி' விசா பெற கட்டணத்தை 1 லட்சம் டாலராக டிரம்ப் உயர்த்தி உள்ளார். இந்த சூழலில், 'எச்1பி' விசாவில் அமெரிக்காவுக்கு வந்த பிரபலங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவுக்கான 'எச்1பி' விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலராக, அதாவது இந்திய மதிப்பில் 88 லட்சம் ரூபாயாக உயர்த்தி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஒரு தொழில் துறை வல்லுநரை, அமெரிக்க நிறுவனம் வேலைக்கு அமர்த்த வேண்டும் என்றால், அவருக்காக அந்த நிறுவனம் ஒரு லட்சம் டாலர் அரசுக்கு செலுத்த வேண்டும் என்பது இந்த விதிமுறை.
இந்த உத்தரவில் இருந்து ஏற்கனவே விசா வைத்திருப்போருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அறிவிப்பு வெளியானபோது இந்த அச்சம், இப்போது விலகியுள்ளது. எனினும், அமெரிக்கா சென்று குடியேறி விடலாம் என்ற கனவில் இருப்பவர்களுக்கு இந்த உத்தரவு, பெரும் சிக்கலாக மாறியுள்ளது.
எப்படி வந்தது இந்த நடைமுறை!
1990ம் ஆண்டில், வெளிநாட்டு வல்லுநர்களை தங்கள் நாட்டில் வேலைக்கு அமர்த்துவதற்காக அமெரிக்கா அறிமுகம் செய்தது தான் 'எச்1பி' விசா. இது பல ஆண்டுகளாக, பல்வேறு வல்லுநர்கள், பட்டதாரிகள் அமெரிக்காவில் குடியேறி நிறுவனங்களை தொடங்க பேருதவியாக இருந்துள்ளது.
தற்போது அமெரிக்காவிலும், பிற உலக நாடுகளிலும் இருக்கும் முன்னணி தொழிலதிபர்கள் பலர், ஒரு காலத்தில் இந்த விசா மூலம் அமெரிக்கா சென்று வேலை பார்த்தவர்களே. இந்த விசாவை பயன்படுத்தி அமெரிக்காவில் வேலைக்கு சென்ற பலர், தங்கள் நிபுணத்துவத்தால் அந்த நாட்டில் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளனர்.
அப்படி ஒரு காலத்தில் 'எச்1பி' விசா பயனாளிகள் பட்டியலில் இடம் பெற்ற இப்போதைய பிரபலங்கள் வருமாறு:
கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை, ஒரு காலத்தில் எச்1பி விசா மூலம் அமெரிக்கா சென்று வேலை பார்த்தவர் தான். அவரது நிபுணத்துவத்தால் இப்போது அந்த நாட்டின் குடியுரிமை பெற்று உயர்ந்த இடத்துக்கு வந்து விட்டார்.
* மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் சத்யா நாதெள்ளா, தனது மனைவியை அமெரிக்காவிற்கு அழைத்து வருவதில் உள்ள சிரமங்களைத் தொடர்ந்து 1994ல் தனது கிரீன் கார்டை கைவிட்டு 'எச்1பி' விசாவுக்கு மாறினார். அந்த வகையில் இவரும் எச்1 பி விசா பயனாளி தான்.
ராஜீவ் ஜெயின், GQG பார்ட்னர்ஸின் சேர்மன்
* 1990ம் ஆண்டில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த பிறகு
ராஜீவ் ஜெயின் 'எச்1பி' விசா பெற்றார்
* 2016ம் ஆண்டில், GQG பார்ட்னர்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தின் மதிப்பு 150 பில்லியன் டாலருக்கும் அதிகமானது.
ஜோதி பன்சல், ஆப் டயனமிக் நிறுவனத்தின் நிறுவனர்
* கடந்த 2000ம் ஆண்டில் 'எச்1பி' விசாவில் அமெரிக்காவிற்குள் ஜோதி பன்சல் கால் எடுத்து வைத்தார். 7 ஆண்டுக்குப் பிறகு கிரீன் கார்டுக்கு மாறினார்,
எலான் மஸ்க், எக்ஸ், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க் முதலில் J-1 விசா வைத்து இருந்தார். பின்னர் அவர் எச்1பி விசாவிற்கு மாறினார்.
ஆண்ட்ரூ என்ஜி, Coursera, DeepLearning.Al நிறுவன இணை நிறுவனர்
அமெரிக்காவிற்கு 1993ம் ஆண்டில் F-1 விசாவில் கார்னகி மெல்லன் பல்கலைக்கழகத்தில் படிக்க ஆண்ட்ரூ என்ஜி வந்தார். பின்னர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் போது எச்1பி பெற்றார்.
எரிக் யுவான், Zoom நிறுவனத்தின் நிறுவனர், சிஇஓ
இவர் எச்1 பி விசா வைத்துள்ளார். 1997ல் எச்1 பி விசா பெறுவதற்கு முன்பு யுவான் தனது விசா விண்ணப்பத்தில் எட்டு முறை ஏற்றுக்கொள்ளப்படாமல் நிராகரிப்பினை சந்தித்தார்.
ஜெப் ஸ்கூல், முன்னாள் eBay நிறுவனத்தின் தலைவர்
1998ம் ஆண்டு நிறுவனம் தொடங்குவதற்கு முன், ஜெப் ஸ்கூல் எச்1 பி விசா வைத்து இருந்தார்.
பின்னர் அவர் 2007ல் அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கு முன்பு o1 விசாவிற்கு மாறினார்.
மெலானியா டிரம்ப்
அதிபர் டிரம்ப் மனைவி மெலானியா, ஸ்லோவேனியா நாட்டை சேர்ந்தவர். அமெரிக்காவிற்கு வரும் போது இவரும் எச்1பி விசா திட்டத்தின் பயன் பெற்றவர் தான். இவர் வெறும் மாடலிங் மட்டுமே செய்து வந்தார். எனினும், அவர் அமெரிக்காவில் நுழைந்தவுடன் எச்1பி விசா பெற்று விட்டார்.
இந்திரா நுாயி
பெப்சி நிறுவனத்தின் தலைவராக இருந்த இந்திரா நுாயி, ஒரு காலத்தில் எச்1 பி விசா மூலம் அமெரிக்கா சென்று வேலை பார்த்தவர் தான். தன் திறமையால், முன்னணி நிறுவனமான பெப்சியின் தலைவராக உயர்ந்தார்.