ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு போலீஸ் காவலில் எஸ்ஸார் கோபி
ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு போலீஸ் காவலில் எஸ்ஸார் கோபி
ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு போலீஸ் காவலில் எஸ்ஸார் கோபி
ADDED : ஆக 09, 2011 12:17 AM
மதுரை : மதுரை ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் கொலை வழக்கில், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபியை, போலீஸ் காவலில் விட கோர்ட் அனுமதித்தது.
தேர்தல் விரோதத்தில் பாண்டியராஜனை கொலை செய்ததாக எஸ்ஸார் கோபி, அவரது சகோதரர்கள் மருது, ஈஸ்வரன், அவனியாபுரம் நகராட்சி கவுன்சிலர் மணிகண்டன் உட்பட 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். எஸ்ஸார் கோபி கைது செய்யப்பட்டார்.
எஸ்ஸார் கோபியை ஏழு நாட்கள் போலீஸ் காவலில் விட அனுமதி கோரி ஆறாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மாஜிஸ்திரேட் டி.சுஜாதா, ''எதிர்மனுதாரரை போலீசார் துன்புறுத்தக்கூடாது. விசாரணையின்போது மூன்று மணிக்கு ஒரு முறை தலா 10 நிமிடங்கள், எதிர்மனுதாரரை, அவரது வக்கீல்கள் இருவர் சந்தித்து பேச அனுமதிக்க வேண்டும். இன்று ஒரு நாள் அனுமதித்து, போலீஸ் காவல் முடிந்து இன்று மாலை 4 மணிக்கு கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும்,'' என, உத்தரவிட்டார். இதையடுத்து எஸ்ஸார் கோபியை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
சரண்: இந்த வழக்கில் மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த கருப்பையா, ஜே.எம்.2 கோர்ட்டில் நேற்று சரணடைந்தார். அவரை, 22ம் தேதி வரை ரிமாண்டில் வைக்க, மாஜிஸ்திரேட் உமா மகேஸ்வரி உத்தரவிட்டார்.


