லோக்பால் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் நொறுங்கிப்போனது என சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு
லோக்பால் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் நொறுங்கிப்போனது என சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு
லோக்பால் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் நொறுங்கிப்போனது என சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

புதுடில்லி: நீண்ட கால இழுபறிக்கு பின்னர் லஞ்சம், ஊழல் தொடர்பான விசாரணைக்கமிட்டி லோக்பால் வரைவு மசோதாவுக்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்தது. இதில் சமூக ஆர்வலர்களின் யோசனை புறந்தள்ளப்ப்பட்டிருப்பதால் எதிர்ப்பும் எழுந்துள்ளது. சிறிய மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டாலும் இது முற்றிலும் நொறுக்கப்பட்ட மசோதா என்று மற்ற தரப்பினரும் விமர்சனம் செய்துள்ளனர்.
நாட்டில் பெருகி வரும் ஊழல் தொடர்பாளர்களை விசாரிப்பது அவர்கள் மீதான குற்றத்திற்கு ஏற்ப தண்டனை தொடர்பான பரிந்துரை செய்யும் லோக்பால் அமைப்பு. இதற்கான வரைவு மசாதா நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் இருந்தது. இதனை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என தியாகி அன்னா ஹசாரே சாகும் வரை உண்ணாவிரதத்தை துவக்கினார். இதனையடுத்து மத்திய அரசு அமைச்சர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கொண்ட கமிட்டியை அமைத்தது. இந்த கமிட்டி கூட்டம் பலமுறை நடந்தது. இரு தரப்பிலும் தனித்தனி அறிக்கை தயாரானது. கருத்தொற்றுமை ஏற்படவில்லை. பிரதமரையும், நீதித்துறையையும் லோக்பால் மசோதாவில் சேர்க்க முடியாது என்று அரசு அடம்பிடித்தது. ஆனால் இப்படி இருக்க கூடாது என்று மறு தரப்பு கேட்டது.
இந்நிலையில் இன்று இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதில் பிரதமர், நீதித்துறை, சி.பி,ஐ., மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை, அதிகாரிகள் சேர்க்க அரசு மறுத்து விட்டது. இது குறித்து மத்திய அமைச்சர் அம்பிகா சோனி கூறியதாவது:
அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கும் இந்த மசோதாவில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி தலைமையில் 9 பேர் இந்தக்குழுவில் இடம் பெறுவர். மக்கள் விரும்பிகளும், சட்டத்துறையினரும் அடங்குவர். வரும் மழைக்கால கூட்டத்தொடரில் மசோதா நிறைவேற்றப்படும் , லஞ்சப்புகாரில் சிக்கியவர்கள் மீது 7 ஆண்டுக்குள் குற்றம் சுமத்தப்பட்டாழொழிய விசாரிக்க முடியாது. பிரதமர் பதவியில் இருக்கும்போது உட்படுத்த முடியாது. நம்பிக்கை மற்றும் இறையாண்மையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.
ஹசோ மீண்டும் உண்ணாவிரத போராட்டம் துவக்குகிறார் : லோக்பால் வரைவு மசோதா கமிட்டியில் இடம் பிடித்துள்ள சந்தோஷ் ஹெக்டே , இதில் பெரிய அளவி்ல் பலமான விஷயங்கள் எதுவும் இல்லை. இத்தனை ஆண்டுகள் காத்துக்கிடந்தும் பயனற்றவை என்று கூறியிருக்கிறார். பலமில்லாத இந்த மசோதா ஒப்புதலை கண்டித்து அன்னாஹசாரே மீண்டும் வரும் ஆக -16 ம் தேதி உண்ணாவிரத போராட்டததை துவக்கப்போவதாக அறிவித்து்ளளார். பிரதமரை சேர்க்காமல் இருப்பதை பா.ஜ., கண்டித்துள்ளது. இது நொறுங்கிப்போன மசோதா ஆரோக்கியமானதல்ல என்று அன்னா ஹசாரேயின் ஆதரவாளர் முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண்பேடி , விமர்சித்துள்ளார். அன்னாஹசாரே குழுவினர் எந்த ஒரு மசோதாவையும் நிறைவேற்ற முடியாது. பார்லி.,யில் உள்ள எம்.பி.,க்கள்தான் இதனை முடிவு செய்ய முடியும் என காஷ்மீரை சேர்ந்த மத்தி அமைச்சர் பரூக் அப்துலலா கூறியிருக்கிறார்.
தி.மு.க., மவுனம் காத்தது: இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் கூட்டணி கட்சிகள் தங்களுடைய கருத்தை தெரிவித்து பேசியது. ஆனால் தி.மு.க., எதுவும் பேசாமல் அமைதி காத்தனர். காரணம் பிரதமர லோக்பால் மசோதாவுக்குள் கொண்டு வர வேண்டும் என்று சமீப காலமாக வலியுறுத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் பார்லி., மழைக்கால கூட்டத்தொடரில் எம்.பி.,க்கள் கடும் ஆட்சேபம் தெரிவிப்பர் என எதிர்பார்க்கபடுகிறது.
உருக்குலைந்த லோக்பால் மசோதா ஹசாரே குழுவினர் பேட்டி: லோக்பால் மசோதா மத்திய அமைச்சரவை தொடர்பாக இன்று மாலை வரைவு கமிட்டியில் இடம்பெற்றுள்ள ஹசாரே குழுவினர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். இது குறித்து பிரசாந்த் பூஷண் கூறுகையில்; வரைவு கமிட்டியில் அரசுதரப்பிலானவர்கள் அதிகம் இடம் பிடித்திருக்கின்றனர். இந்த மசோதா நிறைவேற்றம் அமைச்சர்களின் கருத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர்களின் கருத்துக்கள் ஏற்கப்படவில்லை. இதில் சிறிய மாற்றம் என்பது பொய், முக்கியமான விஷயங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மக்களை தவறான பாதையில் அழைத்து செல்வதற்கு சமம் , இது கொடூரமான நகைச்சுவை மக்களின் உணர்வை புன்படுத்துவதாக உள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர் தொடர்பு குறித்து விசாரிக்க முடியாமல் போய்விடும். பல் இல்லாத இந்த மசோதா , இது லோக்பால் இல்லை , இது ஜோக்பால் என்றும் விமர்சித்தனர். 2ஜி, காமன்வெல்த் ஊழல் உள்ளிட்ட பெரும் ஊழல்வாதிகள் இந்த கட்டுக்குள் வராமல் போயிடுவர். பயனற்ற இந்த மசோதாவை ஏற்க முடியாது என்றனர்.


