Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/திறந்த நிலையில் தொட்டி நூதன கண்டனத்தால் தீர்வு

திறந்த நிலையில் தொட்டி நூதன கண்டனத்தால் தீர்வு

திறந்த நிலையில் தொட்டி நூதன கண்டனத்தால் தீர்வு

திறந்த நிலையில் தொட்டி நூதன கண்டனத்தால் தீர்வு

ADDED : ஆக 25, 2011 01:52 AM


Google News
ஊட்டி : பாம்பே காசில் பகுதியில் மூடப்படாமல் இருந்த தொட்டிக்கு இந்து முன்னணி சார்பில், மலர் வளையம் வைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 10ம் வார்டில் பாம்பே காசில் பகுதி உள்ளது. இங்கு பாதாள சாக்கடை தொட்டி அமைந்துள்ளது. இதன் மேற்பகுதி திறந்த நிலையில் இருப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.'இதனை மூடுவதற்கு கவுன்சிலர் மற்றும் நகராட்சியிடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை,' என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், ஊட்டி நகர இந்து முன்னணி சார்பில், திறந்த தொட்டிக்கு மலர் வளையம் வைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனை அறிந்த ஊட்டி நகராட்சி அதிகாரிகள் அங்கு வந்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். எனினும், கடந்த காலங்களை போல, அங்கு போடும் மூடிகள் களவு போகாமல் மக்களும் பாதுகாக்க வேண்டியதும் அவசியம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us