/உள்ளூர் செய்திகள்/திருச்சி/திருட்டு "சிடி'கள் தயாரிப்பு : "தொழிலதிபர்கள்' கைதுதிருட்டு "சிடி'கள் தயாரிப்பு : "தொழிலதிபர்கள்' கைது
திருட்டு "சிடி'கள் தயாரிப்பு : "தொழிலதிபர்கள்' கைது
திருட்டு "சிடி'கள் தயாரிப்பு : "தொழிலதிபர்கள்' கைது
திருட்டு "சிடி'கள் தயாரிப்பு : "தொழிலதிபர்கள்' கைது
ADDED : ஆக 22, 2011 02:27 AM
திருச்சி: வீட்டை வாடகை எடுத்து, திருட்டு 'சிடி'களை தயாரிக்கும் தொழில் செய்த மூன்று இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதிகளில் புது திரைப்பட 'சிடி'கள் தயாரித்து,
பல இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுவதாக போலீஸாருக்கு தகவல்
கிடைத்தது. இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையில், காந்தி மார்க்கெட் பகுதியில்
உள்ள ஒரு வீட்டை போலீஸார் திடீர் சோதனையிட்டனர். அங்கு, 'சிடி'கள் காப்பி
செய்ய பயன்படும், இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஏழு 'சிடி' ரைட்டர்கள்,
காஞ்சனா, தெய்வத்திருமகள் உட்பட 700 புதிய சினிமா 'சிடி'கள் மற்றும் 3,000
உபயோகப்படுத்தப்படாத 'சிடி'களை கைப்பற்றினர். திருட்டு 'சிடி' தொழில்சாலையை
உருவாக்கிய, திருச்சி- தஞ்சை சாலை பூக்கொல்லையை சேர்ந்த அப்துல் ரஷீத்
மகன் ஜாகீர் உசேன் (27) மற்றும் அவரது நண்பர்கள் இதே பகுதியை சேர்ந்த
சுலைமான் (25) ஜியாவுல் ஹக் (23) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.