ADDED : செப் 21, 2011 09:55 PM
திருவெண்ணெய்நல்லூர்:கூலித்தொழிலாளி தற்கொலை செய்து
கொண்டார்.திருவெண்ணெய்நல்லூர் அடுத்த காந்திக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்
சுப்ரமணி, 48.
கூலித்தொழிலாளியான இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த இவர் கடந்த 19ம் தேதி இரவு விஷம் குடித்து மயங்கி
விழுந்தார். உடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு,
அங்கு சிகிச்சை பலனின்றி சுப்ரமணியன் இறந்தார்.திருவெண்ணெய்நல்லூர்
போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.