Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகடலூர் மாணவர்களுக்கு 27 பதக்கங்கள்

மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகடலூர் மாணவர்களுக்கு 27 பதக்கங்கள்

மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகடலூர் மாணவர்களுக்கு 27 பதக்கங்கள்

மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகடலூர் மாணவர்களுக்கு 27 பதக்கங்கள்

ADDED : செப் 04, 2011 01:59 AM


Google News
கடலூர்:சென்னையில் நடந்த மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் 27 பதக்கங்களை வென்று சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடந்தது. கடலூர், சிதம்பரம், பண்ருட்டியை சேர்ந்த மாணவர்கள் 49 பேர் பங்கேற்றனர். இதில் கடலூர் மாணவர் ஸ்ரீகிருஷ்ணா இரண்டு தங்கம், இரண்டு சில்வர், ஒரு வெண்கலம் என 5 பதக்கமும், தினேஷ்ராஜ், சிவகதிரவன், ரக்ஷாம்பிகா சக்திகுமார் ஆகியோர் தலா ஒரு தங்க பதக்கத்தையும் பெற்றனர்.மேலும் சிவகதிரவன், கீர்த்திவாசன், பிரியதர்சன், தினேஷ்ராஜ், விக்னேஷ்வர், ரக்ஷாம்பிகா, அமிழ்தம் ஆகியோர் சில்வர் பதக்கங்களும், ரக்ஷாம்பிகா, நித்தியஸ்ரீ, திரிசுலா, சேரலாதன், பூவராகவன் ஆகியோர் வெண்கலப்பதக்கமும் என மொத்தம் கடலூர் மாணவர்கள் 27 பதக்கங்களை பெற்றனர்.

பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு கடலூர் மாவட்ட அமச்சூர் ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. எஸ்.பி., பகலவன் தலைமை தாங்கி, போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.விழாவில் சங்கத்தின் பெருந்தலைவர் கரிகாலன், சங்க தலைவர் எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலளர் ராமலிங்கம், துணை தலைவர்கள் அருமைச்செல்வம், கருணாகரன், செயலாளர் சந்திரமோகன்பால்ராஜ் வாழ்த்து தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us