Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/40 புதிய மாடல்களில் மேக்ஸ் மொபைல்

40 புதிய மாடல்களில் மேக்ஸ் மொபைல்

40 புதிய மாடல்களில் மேக்ஸ் மொபைல்

40 புதிய மாடல்களில் மேக்ஸ் மொபைல்

ADDED : ஜூலை 24, 2011 12:31 PM


Google News
மும்பை : மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான மேக்ஸ் மொபைல், இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 40 மாடல்களை அறிமுகம் செய்ய தி்ட்டமிட்டுள்ளது.

2012ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 40 மாடல்களையும், முதல்கட்டமாக அடுத்த காலாண்டு இறுதிக்குள் 4 மாடல்களையும் அறிமுகம் செய்ய உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக மேக்ஸ் குழும தலைவரும், மேலாண்மை இயக்குனருமான அஜய் அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும் இந்த புதிய வகை ஸ்மார்ட் போன்களின் விலை ரூ.5000 முதல் ரூ.8000 வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேக்ஸ் மொபைல் நிறுவனம் இதுவரை 15 மாடல்களை அறிமுகம் செய்து, வெற்றிகரமாக விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us