Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கேரம் போட்டியில் வீரர்கள் தேர்வு

கேரம் போட்டியில் வீரர்கள் தேர்வு

கேரம் போட்டியில் வீரர்கள் தேர்வு

கேரம் போட்டியில் வீரர்கள் தேர்வு

ADDED : ஜூலை 24, 2011 02:26 AM


Google News

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட கேரம் கழகம் சார்பில் மாவட்ட அளவிலான தகுதி கேரம் போட்டி, முத்துப்புதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று துவங்கியது.

அரையிறுதி மற்றும் இறுதி போட்டிக்கு வீரர்கள் தேர்வாகினர்.மாவட்ட கேரம் கழக தலைவர் சிவசண்முகம், போட்டியை துவக்கி வைத்தார். 12 வயதுக்கு உட்பட்டோர் பெண்கள் பிரிவில், செயின்ட் ஜோசப் பள்ளி மாணவியர் டீனூ, சோனூ; ஆண்கள் பிரிவில், திருமுருகன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கலையரசன், பாலாஜி ஆகியோரும் இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றனர்.



14 வயதுக்கு உட்பட்டோர் பெண்கள் பிரிவில், மைக்ரோ கிட்ஸ் பள்ளி மாணவியர் தமன்னா, அபிராமி, ரம்யா மற்றும் ராமகிருஷ்ணா பள்ளி மாணவி தீபிகா ஆகியோரும்.ஆண்கள் பிரிவில், திருமுருகன் பள்ளி மாணவன் கோகுல், நவீன் கார்த்திக், ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளி மாணவன் விக்கேஷ், வள்ளி வித்யாலயா பள்ளி மாணவன் ஆர்மன் ஆகியோர் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். இன்று அரையிறுதி, இறுதி சுற்று போட்டி மற்றும் பெரியவர்களுக்கான ஒற்றையர் போட்டி நடக்கிறது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us