/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பஸ்களை சிறைபிடிக்க பொதுமக்கள் திட்டம்பஸ்களை சிறைபிடிக்க பொதுமக்கள் திட்டம்
பஸ்களை சிறைபிடிக்க பொதுமக்கள் திட்டம்
பஸ்களை சிறைபிடிக்க பொதுமக்கள் திட்டம்
பஸ்களை சிறைபிடிக்க பொதுமக்கள் திட்டம்
ADDED : ஜூலை 25, 2011 09:23 PM
சுல்தான்பேட்டை : மந்திரிபாளையத்தில் நின்று செல்லாத பஸ்களை சிறைபிடிக்க, அப்பகுதி பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.
பல்லடம் - உடுமலை மெயின் ரோட்டில் 12வது கிலோ மீட்டரில் மந்திரிபாளையம் கிராமம் உள்ளது. கடந்த மூன்று மாதங்களாக பல்லடத்தில் இருந்து உடுமலை செல்லும், உடுமலையில் இருந்து திருப்பூர் நோக்கி செல்லும் பெரும்பாலான பஸ்கள், மந்திரிபாளையம் ஸ்டாப்பில் நிற்பதில்லை. இதன் காரணமாக, அப்பகுதி மக்கள் அருகில் உள்ள கேத்தனூர் ஸ்டாப்புக்கு நடந்து அல்லது சைக்கிளில் சென்று, அங்கிருந்து பஸ் ஏறி, தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு சென்று வருகின்றனர். மந்திரிபாளையம் ஸ்டாப்பில் பஸ்கள் நின்று செல்லாததால் அவதி அடைந்துள்ள பொதுமக்கள், அரசு போக்குவரத்து கழக பல்லடம் கிளை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் தரப்பில் நடவடிக்கை எடுக்காததால், மந்திரிபாளையம், எட்டப்பநாயக்கன்பாளையம் பொதுமக்கள் இணைந்து மந்திரிபாளையம் வழியாக உடுமலை செல்லும் பஸ்களை சிறைபிடிக்க முடிவு செய்துள்ளனர்.