ஹசாரேவுக்கு ஆதரவாக டப்பாவாலாக்கள் ஸ்டிரைக்
ஹசாரேவுக்கு ஆதரவாக டப்பாவாலாக்கள் ஸ்டிரைக்
ஹசாரேவுக்கு ஆதரவாக டப்பாவாலாக்கள் ஸ்டிரைக்
UPDATED : ஆக 19, 2011 05:12 PM
ADDED : ஆக 19, 2011 06:48 AM
மும்பை: ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதப்போராட்டம் நடத்திவரும் காந்தியவாதி அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக மும்பை டப்பாவாலாக்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தனர்.
120 ஆண்டு காலமாக , உணவு விநியோகிக்கும் முறையில் 2 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டு சேவையில் சிறந்து விளங்கி வரும் இந்த டப்பாவாலாக்கள் வரலாற்றில் முதன்முறையாக வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர். அதன்படி மும்பையில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டப்பாவாலாக்கள், இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தனர். மும்பை சர்ச்கேட் பகுதியிலிருந்து ஆசாத்மைதின் வரை அமைதி ஊர்வலமாக சென்றனர். அப்போது ஜன்லோக்பால் அமைப்பினை உருவாக்கிட கோரி கோஷம் எழுப்பினர்.