/உள்ளூர் செய்திகள்/மதுரை/போலீஸ் தொந்தரவு கூடாது தி.மு.க.,நிர்வாகி கோர்ட்டில் மனுபோலீஸ் தொந்தரவு கூடாது தி.மு.க.,நிர்வாகி கோர்ட்டில் மனு
போலீஸ் தொந்தரவு கூடாது தி.மு.க.,நிர்வாகி கோர்ட்டில் மனு
போலீஸ் தொந்தரவு கூடாது தி.மு.க.,நிர்வாகி கோர்ட்டில் மனு
போலீஸ் தொந்தரவு கூடாது தி.மு.க.,நிர்வாகி கோர்ட்டில் மனு
ADDED : ஜூலை 16, 2011 01:10 AM
மதுரை : 'விசாரணை என்ற பெயரில் தன்னை போலீஸ் தொந்தரவு செய்யக்கூடாது,' என மதுரை வில்லாபுரம் தி.மு.க.,வை சேர்ந்த மாஜி வேளாண் விற்பனைக்குழு தலைவர் 'அட்டாக்' பாண்டி மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார்.அவரது மனு:நான் அவனியாபுரத்தில் உள்ள ஒரு நிலத்தை இருளாண்டி, பஞ்சவர்ணத்திடம் வாங்கி அனுபவித்து வருகிறேன்.
அந்த இடத்தை கருப்புசாமி சொந்தம் கொண்டாடினார். நான் மதுரை இரண்டாவது கூடுதல் சப்-கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தேன். நான் நில அபகரிப்பு செய்ததாக, கருப்புசாமி போலீசில் புகார் செய்தார். விசாரணை என்ற பெயரில் தன்னை போலீசார் தொந்தரவு செய்ய வாய்ப்புள்ளது என டி.ஜி.பி., மற்றும் போலீஸ் கமிஷனருக்கு மனு அனுப்பினேன். எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீசார் என்னை தொந்தரவு செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இம்மனு அடுத்தவாரம் விசாரணைக்கு வருகிறது.