Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பள்ளி மாணவிக்கு எச்.ஐ.வி., பாதிப்பு: டாக்டர் மீது புகார்

பள்ளி மாணவிக்கு எச்.ஐ.வி., பாதிப்பு: டாக்டர் மீது புகார்

பள்ளி மாணவிக்கு எச்.ஐ.வி., பாதிப்பு: டாக்டர் மீது புகார்

பள்ளி மாணவிக்கு எச்.ஐ.வி., பாதிப்பு: டாக்டர் மீது புகார்

ADDED : ஆக 01, 2011 11:05 PM


Google News

மதுரை: மதுரையில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்துக் கொண்ட 11ம் வகுப்பு மாணவிக்கு தவறுதலாக எச்.ஐ.வி., தொற்றுடைய ரத்தத்தை ஏற்றியதாக டாக்டர் கண்ணப்பன் மீது போலீஸ் கமிஷனர் கண்ணப்பனிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.



மாணவி சார்பில், சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி ஸ்ரீதர் மற்றும் வக்கீல்கள் மோகன்தாஸ், முத்துக்குமார் மூலம் கொடுக்கப்பட்ட புகாரில் தெரிவித்துள்ளதாவது : சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த எனக்கு, இரு ஆண்டுகளுக்கு முன் மூக்கில் ரத்தம் வந்து கொண்டே இருந்தது.

மதுரை காது, மூக்கு, தொண்டை டாக்டர் கண்ணப்பனிடம் சிகிச்சை எடுத்தேன். அப்போது, ஹீமோகுளோபின் வெள்ளை அணுக்கள் குறைவாக இருப்பதாக கூறி, ரத்தவங்கியில் பெறப்பட்ட ரத்தத்தை ஏற்றினார். டிஸ்சார்ஜ் ஆன பின், உடலில் அரிப்பு ஏற்பட்டது. மீண்டும் மூக்கில் ரத்தம் வழிந்தது. மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்ததில் எச்.ஐ.வி., தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால் என் குடும்பம் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளது. எனது படிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமான டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து டாக்டர் கண்ணப்பன் கூறியதாவது: பரிசோதனை செய்யப்பட்ட ரத்தம், அரசு அங்கீகாரம் பெற்ற ரத்தவங்கியில் இருந்து பெறப்பட்டு, மாணவிக்கு ஏற்றப்பட்டது. எனது சிகிச்சையில் எந்த தவறும் இல்லை. இதற்குரிய ஆதாரம் என்னிடம் உள்ளது. என்னிடம் சிகிச்சைக்கு வருமுன், வேறு ஒரு கிளினிக்கில் சிகிச்சை பெற்றுள்ளார். அங்கு ஊசி வழியாக எச்.ஐ.வி., தொற்று ஏற்பட்டிருக்கலாம். நான்கு மாதங்களுக்கு முன் மாணவி தரப்பில் எனக்கு கொடுக்கப்பட்ட வக்கீல் நோட்டீஸிற்கும் உரிய ஆதாரங்களுடன் பதில் அளித்துள்ளேன். என் மீது அவதூறு பரப்பவே இச்செயலில் ஈடுபடுவதாக கருதுகிறேன், என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us