ADDED : செப் 01, 2011 11:53 PM
புதூர் : கிராம பஞ்.,களில், வீட்டு வரி வசூலை துவக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் பணிகளால், நிதி சேவை மேலும் அதிகரித்துள்ளது. இதனால் வீட்டு வரி வசூலை உடனே துவக்கி, நிலைமையை சீராக்க அரசு உத்தரவிட்டுள்ளது. கிராமங்களில் வீட்டு வரி மூலம் 20 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் வரை வருவாய் கிடைக்கும். குறைந்தபட்ச வீட்டு வரி 55 ரூபாயாக கடந்த ஆண்டில் உயர்த்தப்பட்டதால், கிராம பஞ்.,களில் வருவாய் உயர்ந்துள்ளது. இதனால் பஞ்.,களில் வரி வசூல் முன் கூட்டியே துவங்கி உள்ளது.