'நிடி ஆயோக்' கூட்டத்துக்கு சென்ற முதல்வருக்கு பாராட்டு: பா.ஜ.,
'நிடி ஆயோக்' கூட்டத்துக்கு சென்ற முதல்வருக்கு பாராட்டு: பா.ஜ.,
'நிடி ஆயோக்' கூட்டத்துக்கு சென்ற முதல்வருக்கு பாராட்டு: பா.ஜ.,
ADDED : மே 26, 2025 05:21 AM

புதுக்கோட்டை: பா.ஜ., மூத்த தலைவர் ராஜா அளித்த பேட்டி:
ஆப்பரேஷன் சிந்துார் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தது ஆகாஷ். டாஸ்மாக் விவகாரத்தில் அறிவாலயத்தை அதகளப்படுத்த போவதும் ஆகாஷ் தான். அமலாக்கத் துறையின் விசாரணை சரியாகவே உள்ளது. கோடைக்கால விடுமுறைக்கு பின் நடைபெறும் வழக்கு விசாரணையின் போது, உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும்.
தமிழகத்தில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் போதை தான் மையப்புள்ளி. தமிழகத்தில் காவல் துறை உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், அரசு அலுவலக உயர் அதிகாரிகளின் உறவினர்கள், குடும்பத்தினர் படிக்கும் பள்ளிகள் முன்பு தான், 'சிந்தடிக் ட்ரக்' அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக, 'நிடி ஆயோக்' கூட்டத்துக்கு செல்லாத முதல்வர் ஸ்டாலின், இம்முறை சென்றிருப்பது பாராட்டுக்குரியது.
இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.