Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி

அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி

அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி

அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி

ADDED : செப் 25, 2011 10:08 PM


Google News

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் குழந்தைகளின் இறப்பை தவிர்க்க அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.மத்திய அரசின் என்.ஆர்.எச்.எம்., சார்பில் குழந்தைகளின் இறப்பை தவிர்க்க அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்ட பொது சுகாதாரத் துறை துணை இயக்குனர் செந்தில்குமார் தலைமையில் பயற்சியளிக்கப்பட்டது. பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை, கோலார்ப்பட்டி, வால்பாறை, நல்லட்டிபாளையம், நெகமம் உட்பட பல ஆரம்ப சுகாதார நிலைய பிளாக்குகளில் இருந்து பணியாளர்கள் பயிற்சியில் பங்கேற்றனர். கடைசி நாளில் மொத்தம் 385 பணியாளர்கள் பங்கேற்றனர். கோலார்ப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மணிவண்னன் கூறியதாவது: குழந்தைகளின் உடல் வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சத்து, மூளை வளர்ச்சிக்கு தேவைப்படும் 'டி.எச்.ஏ.,' ஆகியவை குழந்தைகளுக்கு கிடைக்க மிக அவசியமானது தாய்ப்பால். அதனை தாய்மார்கள் தவறாது, குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் போன்ற முக்கிய அறிவிப்புகள் இந்த பயிற்சியில் வழங்கப்படுகிறது. பொள்ளாச்சி நாச்சிமுத்து பிரசவ விடுதியில் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இதுகுறித்த செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்படுகிறது. இதில் பங்கேற்ற அனைவரும் எதிர்காலத்தில் குழந்தை இறப்பு விகிதத்தை தவிர்க்க முடியும், என்றார். மருத்துவமனை குழந்தை நல டாக்டர் ராஜா மற்றும் கோலார்ப்பட்டி மருத்துவ அலுவலர் மணிவண்ணன் பயிற்சியளித்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us