பிரிட்டன் போர் விமானம் திருவனந்தபுரத்தில் அவசர தரையிறக்கம்; காரணம் இதுதான்!
பிரிட்டன் போர் விமானம் திருவனந்தபுரத்தில் அவசர தரையிறக்கம்; காரணம் இதுதான்!
பிரிட்டன் போர் விமானம் திருவனந்தபுரத்தில் அவசர தரையிறக்கம்; காரணம் இதுதான்!
ADDED : ஜூன் 15, 2025 12:13 PM

திருவனந்தபுரம்: பிரிட்டனுக்கு சொந்தமான எப்-35 போர் விமானம் திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிக்கப்பட்டது. விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரிட்டீஷ் கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இருந்து புறப்பட்ட எப் 35 போர் விமானம், அரபிக்கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது விமானத்தில் எரிபொருள் குறைவாக இருப்பதையும், மீண்டும் போர்க்கப்பலுக்கு செல்வதற்கு போதுமானதாக இருக்காது என்பதையும் விமானி உணர்ந்தார்.
வேறு வழியில்லாத சூழலில், அருகேயுள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு அனுமதி கோரினார். இதை பரிசீலனை செய்த மத்திய அரசு, உடனடியாக அனுமதி வழங்கியது.
இதையடுத்து நேற்றிரவு 9.30 மணியளவில் போர் விமானம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் தற்போது எரிபொருள் நிரப்ப மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது.
இந்த விமானம், வளைகுடா பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அமைதியற்ற சூழலை கருத்தில் கொண்டும், கடற்கொள்ளையர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.