Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/சாலை விபத்துகள்: நான்கு பேர் பலி

சாலை விபத்துகள்: நான்கு பேர் பலி

சாலை விபத்துகள்: நான்கு பேர் பலி

சாலை விபத்துகள்: நான்கு பேர் பலி

ADDED : செப் 22, 2011 12:30 AM


Google News

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில், நான்கு பேர், உடல் நசுங்கி இறந்தனர்.

சென்னை திருநீர்மலைப் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் வெற்றிவேல், 18. லாரி கிளீனர். இவர், நேற்றுமுன்தினம் காலை, லாரியில் செங்கல் ஏற்றிக் கொண்டு, மாம்பாக்கம் கிராமத்திற்கு சென்றார்.

அங்கு, லாரி திடீரென கவிழ்ந்தது. லாரி அடியில் சிக்கிக் கொண்ட, வெற்றிவேல் இறந்தார். சிறுதாவூர் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன். இவரது மகன் பிரகாஷ், 18. கல்லூரி மாணவர். இவரும், அதே பகுதியை சேர்ந்த ரோஸ்கணபதி, 26, நித்தீஷ், 20, ஆகியோர், 19ம் தேதி மாலை 6.30 மணிக்கு, செங்கல்பட்டிலிருந்து மாமல்லபுரம் நோக்கிச் சென்ற, அரசு பஸ்சில் படியில் தொங்கியபடி பயணம் செய்தனர். திருக்கழுக்குன்றம் அடுத்த அம்மணம்பாக்கம் கூட்ரோடு அருகே சென்ற போது, அவ்வழியே சென்ற வேன், மேடில் ஏற முடியாமல், பின்பக்கமாக வந்தபோது, பஸ் படியில் தொங்கியவர்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரகாஷ், சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, அன்று இரவே பரிதாபமாக இறந்தார். மறைமலைநகர் அடுத்த பேரமனூர் கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார், 32. இவர், தனது நண்பர் சுரேஷ்குமார், 34, உடன், மோட்டார் சைக்கிளில், நேற்றுமுன்தினம் பகல் 12 மணிக்கு, மகேந்திராசிட்டிக்கு சென்றார். அப்போது, அவ்வழியே வந்த கிரேன், அவர்கள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த உதயகுமார், அதே இடத்தில், பரிதாபமாக இறந்தார். சுரேஷ்குமார், சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். செய்யூர் அடுத்த முட்டுக்காடு கிராமத்தில், 19ம் தேதி இரவு 8 மணிக்கு, 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சாலையைக் கடந்தார். அப்போது, அவ்வழியே வந்த தனியார் பஸ் டிரைவர், அவர் மீது மோதாமலிருக்க, பஸ்சை இடதுபுறமாக திருப்பினார். ஆனால், பஸ் அவர் மீது மோதியதுடன், சாலையோரமிருந்த மரத்தின் மீது மோதி கவிழ்ந்தது. அந்த மூதாட்டி அதே இடத்தில் இறந்தார். பஸ்சில் பயணம் செய்த முகமதுஅலி, 55, அருள்முருகன், 30, யசோதா, 60, ஆகியோர் காயமடைந்தனர். இறந்த பெண் குறித்த விவரம் தெரியவில்லை. இவ்விபத்துகள் குறித்து, சம்பந்தப்பட்ட போலீசார், விபத்துக்கு காரணமான வாகனங்களை ஓட்டி வந்த, டிரைவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us