ADDED : செப் 30, 2011 01:40 AM
ராசிபுரம்: ராசிபுரம் திருவள்ளுவர் அரசுக் கலைக் கல்லூரி முன், புதிய
ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெறக்கோரி மத்திய, மாநில அரசு ஊழியர்
சங்கத்தினர், போராட்டத்தில் ஈடுபட்டனர்.கல்லூரி கிளைத் தலைவர் கணேசன் தலைமை
வகித்தார்.
மண்டல பொருளாளர் சதாசிவம் வாயிற் முழக்க போராட்டத்தை துவக்கி
வைத்து, கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். கிளை பொருளாளர் லோகநாதன்
உள்பட பேராசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.