"சுரங்க ஊழல் நிரூபிக்கப்பட்டால் அரசியலை விட்டே விலகத் தயார்'
"சுரங்க ஊழல் நிரூபிக்கப்பட்டால் அரசியலை விட்டே விலகத் தயார்'
"சுரங்க ஊழல் நிரூபிக்கப்பட்டால் அரசியலை விட்டே விலகத் தயார்'

பெங்களூரு : ''சுரங்க ஊழலில் எனக்குத் தொடர்புள்ளது என்று நிரூபிக்கப்பட்டால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது மட்டுமின்றி, அரசியல் துறவறம் மேற்கொள்வேன்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது: டெலிபோன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகக் கூறும் லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோர், முன்பே புகார் கொடுத்திருக்க வேண்டும். இது குறித்து விசாரிக்க பிரதமர் மன்மோகன் சிங், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்.
என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையா என்பது குறித்து பா.ஜ., மேலிடத் தலைவர்கள் கொண்ட குழுவை அமைத்து விசாரிக்கலாம் என, தேசியத் தலைவர் நிதின் கட்காரிக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்.
கடந்த, 20 ஆண்டுகளாக கர்நாடகாவில் சுரங்கத் தொழிலில் முறைகேடு நடந்து வருகிறது. சுரங்கத்தொழில் ஊழல் ஆரம்பமானது, காங்கிரஸ் ஆட்சியில் தான். அதிக அளவில் லைசென்ஸ் கொடுத்து ஊக்குவித்தது ம.ஜ.த., ஆட்சிக் காலத்தில். பார்லிமென்ட் ஆகஸ்ட் முதல் தேதி துவங்க உள்ள நிலையில், சுரங்க விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ., எம்.பி.,க்கள் பேசவுள்ளனர். இது குறித்து வரும் 31ம் தேதி பா.ஜ., எம்.பி.,க்கள், எம்.எல்,ஏ.,க்கள் கூட்டம், பெங்களூரில் நடக்கவுள்ளது. ஏதாவது பிரச்னையைக் கிளப்பி, பா.ஜ., ஆட்சியைக் கலைக்க எதிர்க் கட்சிகளான காங்கிரஸ், ம.ஜ.த., கனவு காண்கின்றன. அவர்களின் எண்ணம் நிறைவேறாது.
கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சி இருந்தால் ம.ஜ.த., அட்ரஸ் இல்லாமல் போய்விடும் என, முன்னாள் பிரதமர் பேசியுள்ளார். இதனால் எதையாவது சொல்லி ஆட்சியைக் கலைத்து விடலாம் என நினைக்கிறார். லோக் ஆயுக்தாவின் அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும் வரை, அது குறித்து பேச மாட்டேன். மவுனமாக இருப்பேன். ஒரு வேளை, அறிக்கையில் எனது பெயர் இடம்பெற்று, என் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால், நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதுடன், அரசியல் துறவறம் மேற்கொள்வேன் என்றார்.