கோவை: கோவையில் தேசர் இசை விருந்து நிகழ்ச்சி நடந்தது.
கோவை சலீவன் வீதியில் உள்ள ராகவேந்திர சுவாமி கோவிலில், வசந்த காவேரி பவுண்டேஷன் சார்பில் இசை விழா நடந்தது. உடுப்பி, பிரசன்ன தீர்த்த சுவாமிகள் பங்கேற்றார். இவரது முன்னிலையில் நடந்த இசை நிகழ்ச்சியில், விருது பெற்ற இசை பாடகர் பிரசன்னா பாடினார். சென்னையைசேர்ந்த சுரேஷ் அத்ரே தபலாவும், காளிதசன் வயலினும் இவரது பாடலுக்கு மெருகூட்டின. குரு ராகவேந்திரா மிருதங்கம் வாசித்தார். பிரசன்னா சகோதரர்கள் தம்பூரா வாசித்தனர்.