பல்லடம் : கோவையை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான காற்றாலை, சுல்தான்பேட்டை ஒன்றியம், இடையர்பாளையத்தில் உள்ளது.
காற்றாடி பின்புறம் உள்ள நாசில் எதிர்பாராதவிதமாக நேற்று தீப்பிடித்தது. காற்றாலை மேலாளர் சிதம்பரம், பல்லடம் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் ஆறுமுகப்பூமாலை தலைமையில் சென்ற தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.