UPDATED : ஜூலை 28, 2011 08:47 AM
ADDED : ஜூலை 27, 2011 05:40 PM
கோல்கட்டா : மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, தன்னார்வ தொண்டு நிறுவனமான ஸ்ரீ ராமகிருஷ்ணா - விவேகானந்தா மிஷன் பார் மாஸ் வெல்பேர் அமைப்பு, விவேகானந்தா கர்மயோகி விருதை வழங்கி கவுரவித்துள்ளது.
பண்பாடு, கிரியேட்டிவிட்டி, வேளாண்மை உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் தேவையான மாற்றங்களை கொண்டு வந்ததை கவுரவிக்கும் வகையில் இந்தவிருது வழங்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்தனர். பாராட்டுச் சான்றிதழ், நினைவுப்பரிசு மற்றும் அங்கவஸ்திரம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியதான இந்த விருது மம்தாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.