/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ஆதரவற்ற முதியோர்கள் குழந்தைக்கு அன்னதானம்ஆதரவற்ற முதியோர்கள் குழந்தைக்கு அன்னதானம்
ஆதரவற்ற முதியோர்கள் குழந்தைக்கு அன்னதானம்
ஆதரவற்ற முதியோர்கள் குழந்தைக்கு அன்னதானம்
ஆதரவற்ற முதியோர்கள் குழந்தைக்கு அன்னதானம்
ADDED : செப் 20, 2011 11:40 PM
மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் வட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளன முன்னாள் தலைவர் ஆறுமுகசாமியின் நினைவு நாளை முன்னிட்டு அன்னதானம் நடந்தது.
திருவெள்ளரையில் உள்ள கிருஷ்ணா அறக்கட்டளையில் வசிக்கும் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மண்ணச்சநல்லூர் வட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்க செயலாளர் செல்வராஜ் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். சங்கத்தலைவர் புரு÷ஷாத்தமன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். பொருளாளர் நந்தகோபால், திருவெள்ளரை கிருஷ்ணா அறக்கட்டளை நிர்வாகி திருமலைராஜன் முன்னிலை வகித்தனர். சங்க இணைச்செயலாளர் நாகராஜன், துணைத்தலைவர் வாசுதேவன், உறுப்பினர்கள் ராஜகோபால், நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.