ADDED : செப் 13, 2011 12:58 AM
கரூர்: மத்திய அரசின் நேருயுவகேந்தரா, ஆறுதல் அறக்கட்ட ளை, கரூர்
அடைக்கலமாதா அன் னை கல்வி மற்றும் கருணைஅற க்கட்டளை சார்பில் மொபை ல்
ஃபோன்பழுதுபார்க்கும் பயிற்சி துவக்க விழா கரூரில் நடந்தது.
அடைக்கலமாதா
அறக்கட்டளை தலைவர் விஜய் ஆண்டனி தலைமை வகித்தார். நேருயுவகேந்திரா மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் மயில்சாமி பயிற்சியை துவக்கி வைத்தார். விழாவில், ஆறுதல்
அறக்கட்டளை அறங்காவலர் கண்ணன், அடைக்கலமாதா அறக்கட்டளை செயலாளர் ஆனி
ஆண்டனி, திருமூர்த்தி, பயிற்சி வகுப்பில் 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்
நேருயுவகேந்திரா நிர்வாகி பிரியதர்ஷினி நன்றி கூறினார். புதிதாக மொபைல்
ஃபோன் பயிற்சி வகுப்பில் சேர கரூர் மாவட்டத்தில் இருந்து ஆண், பெண்
இருபாலரும் கரூர் புதிய பஸ்ஸ்டாண்ட் மாடியில் உள்ள அறக்கட்டளை அலுவலகத்தில்
பெயர்களை பாதிவு செய்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.