/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பெத்தாசமுத்திரத்தில் கோவில் கட்ட அதிகாரிகள் தடைபெத்தாசமுத்திரத்தில் கோவில் கட்ட அதிகாரிகள் தடை
பெத்தாசமுத்திரத்தில் கோவில் கட்ட அதிகாரிகள் தடை
பெத்தாசமுத்திரத்தில் கோவில் கட்ட அதிகாரிகள் தடை
பெத்தாசமுத்திரத்தில் கோவில் கட்ட அதிகாரிகள் தடை
ADDED : ஆக 07, 2011 01:37 AM
கள்ளக்குறிச்சி : பெத்தாசமுத்திரத்தில் கோவில் கட்டவும், விழா நடத்தவும் அதிகாரிகள் தடை விதித்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த பெத்தாசமுத்திரத்தில் உள்ள பொது இடத்தில் காலனி தரப்பினர் விநாயகர் கோவில் கட்ட ஏற்பாடு செய்தனர்.
இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அடிக்கடி பிரச்னை எழுந்து வருகிறது.இது குறித்த சமாதான குழு கூட்டம் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர். டி.ஓ., உமாபதி தலைமையில் நடந்தது. தாசில்தார் வைகுண்டவரதன், நேர்முக உதவியாளர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் இரு தரப்பிலிருந்தும் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் சுமூக தீர்வு ஏற்படாததால், பிரச்னைக்குரிய இடத்தை ஆர்.டி.ஓ., பார்வையிட்டார். பின்னர் இரு தரப்பினரிடையே உடன்பாடு ஏற்படாததால் அவ்விடத்தில் மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடத்தவும், கோவில் கட்டுதவதற்கும் தடை விதித்தார்.