/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பாளை., அரசு அலுவலர் குடியிருப்பில் குடிநீருக்காக அலையும் பொதுமக்கள்பாளை., அரசு அலுவலர் குடியிருப்பில் குடிநீருக்காக அலையும் பொதுமக்கள்
பாளை., அரசு அலுவலர் குடியிருப்பில் குடிநீருக்காக அலையும் பொதுமக்கள்
பாளை., அரசு அலுவலர் குடியிருப்பில் குடிநீருக்காக அலையும் பொதுமக்கள்
பாளை., அரசு அலுவலர் குடியிருப்பில் குடிநீருக்காக அலையும் பொதுமக்கள்
திருநெல்வேலி : பாளை., அரசு அலுவலர் குடியிருப்பு பகுதிகளில் தாமிரபரணி தண்ணீர் கிடைக்காததால் மக்கள் தண்ணீருக்காக அலையவேண்டியுள்ளது.
தண்ணீருக்காக மக்கள் குடத்தை தூக்கிக் கொண்டு மற்ற தெருக்களுக்கு அலையவேண்டியுள்ளது. அரசு அலுவலர் குடியிருப்பு 2, 3, 15, 16வது குறுக்கு தெருக்களில் தண்ணீர் வந்து 4 ஆண்டுகள் ஆகிறது. தண்ணீர் சரியாக திறக்கப்படாததால் அரசு அலுவலர் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் கிடைப்பதில்லை. இதுகுறித்து பலமுறை மனுக் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தண்ணீர் வரி மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் தண்ணீர் வர எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த விஷயத்தில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி அரசு அலுவலர் குடியிருப்பு பகுதிகளுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.


