/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பர்கூர் மலையில் குடிநீர், சாலை, உயர்மட்ட பாலம் :முன்மொழிவு தயாரித்து அனுப்ப உத்தரவுபர்கூர் மலையில் குடிநீர், சாலை, உயர்மட்ட பாலம் :முன்மொழிவு தயாரித்து அனுப்ப உத்தரவு
பர்கூர் மலையில் குடிநீர், சாலை, உயர்மட்ட பாலம் :முன்மொழிவு தயாரித்து அனுப்ப உத்தரவு
பர்கூர் மலையில் குடிநீர், சாலை, உயர்மட்ட பாலம் :முன்மொழிவு தயாரித்து அனுப்ப உத்தரவு
பர்கூர் மலையில் குடிநீர், சாலை, உயர்மட்ட பாலம் :முன்மொழிவு தயாரித்து அனுப்ப உத்தரவு
ADDED : ஜூலை 23, 2011 01:09 AM
ஈரோடு : பர்கூர் மலைவாழ் மக்களின் அடிப்படை தேவைகளான, குடிநீர், சாலை வசதிகளை மேம்படுத்த, ஈரோடு கலெக்டர் காமராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அந்தியூர் யூனியனுக்கு உட்பட்ட பர்கூர், தாமரைக்கரை, கொங்காடை ஆகிய மலைவாழ் கிராமங்களை நேற்று, கலெக்டர் காமராஜ் பார்வையிட்டார். அங்குள்ளவர்களிடம் பிரச்னைகளை கேட்டறிந்தார். 'தாமரைக்கரை முதல் மணியாச்சி பள்ளம் வரையிலான சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால், சென்று வர மிகவும் சிரமமாக உள்ளது' என, கிராம மக்கள் தெரிவித்தனர். உடன், தாமரைக்கரை - மணியாச்சி பள்ளம் ஓடையின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைப்பது குறித்து கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.
அங்கு கூடியிருந்த மக்கள், 'தாமரைக்கரை முதல் கொங்காடை வரை உள்ள சாலையில் ஒன்னங்கரை, தம்மரெட்டி, ஆலணை, ஒசூர், கோவில்நத்தம், சின்னசெங்குளம், பெரியசெங்குளம், செங்காடை காலனி வரை எட்டு கிராமங்களில் 1,500க்கும் மேற்பட்ட குடும்பங்கள், 5,500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் பயன்பெற மணியாச்சி பள்ளம் பகுதியில் உயர்மட்ட பாலம் அமைத்துக் கொடுத்தால் உதவியாக இருக்கும், பள்ளி செல்லுதல், மலைப்பகுதியில் உற்பத்தியாகும் பொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்ல எளிதாகும். மலைப்பகுதியில் நல்ல குடிநீர் கிடைப்பதில்லை. சுகாதாரமான குடிநீர் வழங்க வழி செய்ய வேண்டும்' என்றனர். உடனடியாக, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களை அழைத்து, 'மலைவாழ் பகுதியில் உள்ள மொத்த மக்கள் தொகையை கணக்கிட்டு, எங்கெங்கு குடிநீர் குழாய் அமைக்க வேண்டும் என்பதை ஆய்வு செய்து விரைவாக அமைக்க வேண்டும். அதுபோல, உயர்மட்டப் பாலம் அமைக்கவும் தேவையான முன்மொழிவுகளை தயாரித்து உடன் அனுப்ப வேண்டும்' என, கலெக்டர் கேட்டுக் கொண்டார். அந்தியூர் எம்.எல்.ஏ., ரமணிதரன், மாவட்ட திட்ட இயக்குனர் ரத்தினசாமி, கோபி ஆர்.டி.ஓ., மீனா பிரியதர்ஷினி ஆகியோர் உடனிருந்தனர்.