Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/424 ஓட்டுச்சாவடிகள் எவை, எவை?

424 ஓட்டுச்சாவடிகள் எவை, எவை?

424 ஓட்டுச்சாவடிகள் எவை, எவை?

424 ஓட்டுச்சாவடிகள் எவை, எவை?

ADDED : செப் 04, 2011 11:07 PM


Google News
திருப்பூர் : ஒருங்கிணைக்கப்பட்டுள்ள மாநகராட்சியில் உருவாக்கியுள்ள 60 வார்டுகளில், 144 மையங்களில், 424 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. உள்ளாட்சி தேர்தலுக்காக, வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.திருப்பூர் மாநகராட்சி எல்லை 60 வார்டுகளுடன் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. மறுசீரமைக்கப்பட்ட வார்டு எல்லைகளுடன், அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால், வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, புதிதாக அமைய உள்ள 60 வார்டுகளில், ஓட்டுச்சாவடிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கடந்த சட்டசபை தேர்தலை அடிப் படையாக கொண்டு, உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுச்சாவடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. வார்டு எண் மற்றும் ஓட்டுச்சாவடிகள்: (எண்ணிக்கை அடைப்பு குறிக்குள்):வார்டு எண் 1: அனுப்பர்பாளையம், வேலம்பாளையம், தண்ணீர் பந்தல் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் (6) 2.ஆத்துப்பாளையம் பள்ளி (1)3.செட்டிபாளையம்,

குமரன் காலனி, அண்ணா காலனி பள்ளிகள் (5)4.அய்யங்காளிபாளையம் பள்ளி (3)5.அனுப்பர்பாளையம் சத்யா நகர், அனுப்பர்பாளையம் பள்ளிகள் (6)6.அனுப்பர்பாளையம் கவிதாலட்சுமி நகர், அனுப்பர்பாளையம், பெரியார் காலனி பள்ளிகள் (6) 7.அய்யங்காளிபாளையம் பள்ளி (5) 8.அங்கேரிபாளையம் ரோடு இன்பேன்ட் ஜீசஸ், குமரானந்தபுரம் அரசு பள்ளி (7) 9.பிஷப் பள்ளி, குமரானந்தபுரம் பள்ளி (6) 10.குமார் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி, பத்மாவதிபுரம் மாநகராட்சி பள்ளி (7) 11.சாமிநாதபுரம், சாமுண்டிபுரம், செல்லம்மாள் காலனி மாநகராட்சி பள்ளிகள் (7) 12.பிரேமா நர்சரி பள்ளி, பால முருகன் நகர் மாநகராட்சி பள்ளி (10) 13.பிரேமா மெட்ரிக் பள்ளி, சந்திரகாவி மாநகராட்சி பள்ளி, சுப்பையா மெட்ரிக் பள்ளி (9) 14.சிறுபூலுவப்பட்டி, அரங்க நாதபுரம், காவிலிபாளையம், சோளிபாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் (8) 15.வேலம்பாளையம் நடுநிலைப்பள்ளி, அனுப்பர்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி (4) 16.பாண்டியன் நகர் பள்ளி (4)17.ஜே.பி.,நகர் முருகு பப்ளிக் பள்ளி, அண்ணா நகர் பள்ளிகள் (3)18.வாவிபாளையம், சேடர்பாளையம், நெருப்பெரிச்சல், சமத்துவபுரம் பள்ளிகள் (5) 19.கூலிபாளையம், நல்லாத்துப்பாளையம், பொம்மநாயக்கன் பாளையம், பூலுவப்பட்டி, மும்மூர்த்தி நகர் அரசு பள்ளிகள் (7) 20.போயம்பாளையம், நேருநகர் பள்ளிகள் (6)21.கஞ்சம்பாளையம், மண்ணரை பள்ளிகள், சத்யா காலனி சமுதாய நலக்கூடம் (4) 22.பாப்பநாயக்கன்பாளையம் பள்ளி (6)23.புதுராமகிருஷ்ணபுரம் உயர்நிலைப்பள்ளி, துவக்கப்பள்ளி, கோல்டன் நகர் (13)24.திருநீலகண்டபுரம், கொங்கு நகர், வெங்கடாசலபதி நகர் மாநகராட்சி பள்ளிகள் (8) 25.மேட்டுப்பாளையம், லட்சுமி நகர், தேவாங்கபுரம் மாநகராட்சி பள்ளிகள் (10)26.நெசவாளர் காலனி, எஸ்.வி., காலனி மாநகராட்சி பள்ளிகள் (9)27.நிர்மலா மெட்ரிக் பள்ளி, எம்.எஸ்., நகர் மாநகராட்சி பள்ளி, சின்னசாமி அம்மாள் மாநகராட்சி பள்ளி(9)28.டி.என்.கே., வித்யாலயா பள்ளி, கேத்தம்பாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளி (3)29.பிச்சம்பாளையம், கே.ஜி., நகர் விகாஸ் வித்யாலயா நர்சரி பள்ளி (4)30.பிச்சம்பாளையம் புதூர் நடுநிலைப்பள்ளி, கேத்தம்பாளையம் நடுநிலைப்பள்ளி (4)31.வாலிபாளையம், சடையப்பன் கோவில் பிரேமா நர்சரி பள்ளி (5)32.பாளையக்காடு முருகப்ப செட்டியார் பள்ளி, கருமாரம்பாளையம் பள்ளி(8) 33.பாரப்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம், கிளை நூலகம் (2)34.காஞ்சிபுரம், காசிபாளையம், என்.போயர் காலனி பள்ளிகள் (3)35.சென்னிமலைபாளையம், விஜயாபுரம் பள்ளிகள் (4)36.முத்தணம்பாளையம், ரங்கேகவுண்டன்பாளையம், கோவில்வழி, அமராவதிபாளையம் ராஜலிங்கம் கல்வி நிலையம், பொன்கோவில் நகர் டி.என்.கே., வித்யாலயா பள்ளிகள் (6) 37.கே.செட்டிபாளையம், செவந்தாம்பாளையம் செல்வவிநாயகர் பள்ளி (3)38.நல்லூர், கே.என்.எஸ்., கார்டன், செயிண்ட் ஜோசப் பள்ளி (5) 39.செயின்ட் ஜோசப் கல்லூரி, ஜெயர் நகர் வித்ய விகாஷினி பள்ளி (4) 40.செயின்ட் ஜோசப் பள்ளி, செரங்காடு பள்ளி (4) 41.சந்திராபுரம், செரங்காடு வள்ளி வித்யாலயா பள்ளி (4) 42.தட்டான்தோட்டம் கலைமகள் மெட்ரிக் பள்ளி, அரண்மனைப் புதூர் பள்ளி, தில்லை நகர் மணி பப்ளிக் அகாடமி, ஆர்.வி.இ., லே-அவுட் யுனிவர்சல் நர்சரி பள்ளி (14)43.செல்லப்பபுரம், காங்கயம்பாளையம் புதூர் பள்ளிகள் (7)44.நொய்யல் வீதி, பூலவாரி சுகுமார் நகர், பெரியதோட்டம் பள்ளிகள் (10)45.முத்துப்புதூர், பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.சி., பள்ளி, செல்லப்பபுரம் பள்ளிகள் (12)46.ராயபுரம், காதர்பேட்டை மாநகராட்சி பள்ளிகள் (6)47.ஓடக்காடு பள்ளி (6)48.ஜெய்வாபாய் பள்ளி, நஞ்சப்பா பள்ளி (6)49. கருவம்பாளையம், பாரப்பாளையம், கே.வி.ஆர்., நகர் தெற்கு மாநகராட்சி பள்ளிகள், நடராஜா தியேட்டர் ரோடு தெற்கு ரோட்டரி நர்சரி பள்ளி (11)50.தென்னம்பாளையம், வெள்ளியங்காடு மாநகராட்சி பள்ளிகள் (9)51.பெரிச்சிபாளையம், வெள்ளியங்காடு யுனிவர்சல் வித்யாலயா நர்சரி பள்ளி (8)52.கருப்பகவுண்டம்பாளையம், கல்லாங்காடு, திருக்குமரன் நகர், பலவஞ்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் (7)53.வீரபாண்டி அரசு மேல்நிலை மற்றும் துவக்க பள்ளி (4) 54.குப்பாண்டம்பாளையம், பாரதி நகர் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் (5)55.சுண்டமேடு ஊராட்சி ஒன்றிய பள்ளி (2) 56.தெற்கு ரோட்டரி நர்சரி பள்ளி, பாரப்பாளையம் பள்ளி, கதிரவன் மெட்ரிக் பள்ளி, கே.வி.ஆர்., நகர் மாநகராட்சி பள்ளி (11) 57.முருகம்பாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளி (3)58.இடுவம்பாளையம் அரசு பள்ளி (2)59.ஆண்டிபாளையம், சின்னாண்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள்(5)60.எஸ்.ஆர்.,நகர் தண்டபாணி மெட்ரிக் பள்ளி, குளத்துப்புதூர் ஆதி திராவிடர் நலப்பள்ளி, போயர் காலனி ஊராட்சி ஒன்றிய பள்ளி (4)

மொத்தம் உள்ள 60 வார்டுகளில், ஊராட்சி அலுவலகம், சமுதாய கூடம் மற்றும் பள்ளிகள் என 144 மையங்கள் அமைக்கப்பட உள்ளன. மாநகராட்சியில், இரண்டு லட்சத்து 14 ஆயிரத்து 659 ஆண்கள்; ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 629 பெண்கள்; 12 திருநங்கைகள் என நான்கு லட்சத்து 8,300 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் மொத்தம் 363 பாகங்கள் உள்ளன. மாநகர பகுதிகளில் வார்டு வாரியான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி வேகமாக நடந்து வருகிறது. விரைவில், வார்டு வாரியாக, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us