ADDED : அக் 13, 2011 12:41 AM
பழநி : பழநியில் தனிமனித விமர்சன நோட்டீஸ் பிரச்னையில், அ.தி.மு.க., மாவட்ட
மாணவரணி பொருளாளர் அக்னிவீரபுத்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்
ளது.பழநி ஒன்றியம், சிவகிரிப்பட்டி ஊராட்சி தலைவரான மாரியப்பன், ஒன்றிய
தி.மு.க., செயலாளராக உள்ளார்.
இத்தேர்தலில், மீண்டும் ஊராட்சி தலைவர்
பதவிக்காக போட்டியிடுகிறார். இதே ஊரைச் சேர்ந்த அ.தி. மு.க., மாவட்ட
மாணவரணி பொருளாளர் அக்னிவீரபுத்திரன் உள்பட ஏழு பேர் களத்தில் உள்ளனர்.
தேர்தல் பிரசாரத்தில், தனிமனித விமர்சனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள
சூழலில், மாரியப்பனை விமர்சனம் செய்து நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாரியப்பன் புகாரின்படி, அக்னிவீரபுத்திரன், மனோகரன் மீது
போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.


