அமர்சிங்கிற்கு கருணை காட்டலாம்: திக்விஜய்சிங்
அமர்சிங்கிற்கு கருணை காட்டலாம்: திக்விஜய்சிங்
அமர்சிங்கிற்கு கருணை காட்டலாம்: திக்விஜய்சிங்
ADDED : செப் 09, 2011 12:45 PM
குணா(ம.பி): ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமர்சிங்கிற்கு கருணை காட்டலாம் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் திக்கவிஜய்சிங் கூறினார். மத்தியபிரதேச மாநிலத்தில் செய்தியாளர்களுக்கு திக்விஜய்சிங் அளித்த பேட்டிவருமாறு: டில்லி ஐகோர்ட் குண்டுவெடிப்பு சம்பவத்தினை எதிர்க்கட்சிகள் அரசியலாக்க முயற்சிக்கின்றனர். நாட்டை சீர்குலைக்க நினைக்கும் பயங்கரவாத சக்திகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும். ஓட்டுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள அமர்சிங் ஒருஅப்பாவி, அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பார். அவருக்கு கருணை காட்டலாம்.
ஹசாரேயின் உண்ணாவிரதப்போர்ட்டத்திற்கு பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். உள்ளது என ஒரு போதும் கூறவில்லை. காந்தியடிகள் ஒரு சமூக சேவகர் அவரை மதிப்பது போன்று ஹசாரேயையும் மதிக்கிறேன். இவ்வாறு திக்விஜய் சிங் கூறினார்.