Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மதுரையில் கடத்தல் "நாடகத்தை'அரங்கேற்றிய சேலம் மாணவர்

மதுரையில் கடத்தல் "நாடகத்தை'அரங்கேற்றிய சேலம் மாணவர்

மதுரையில் கடத்தல் "நாடகத்தை'அரங்கேற்றிய சேலம் மாணவர்

மதுரையில் கடத்தல் "நாடகத்தை'அரங்கேற்றிய சேலம் மாணவர்

ADDED : ஜூலை 15, 2011 12:25 AM


Google News
மதுரை:சேலத்தில் தன்னை நான்கு பேர் ஆம்னி வேனில் கடத்தியதாகவும், அவர்களிடமிருந்து தப்பித்து மதுரை வந்ததாகவும் 'நாடகமாடி' ஓமலூரைச் சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவர், கரிமேடு போலீசாரை குழப்பினார். நேற்று முன் தினம் மதியம் ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில், திக்கு தெரியாமல் நின்றிருந்த அந்த மாணவரை, கரிமேடு போலீசார் விசாரித்தனர். தாரமங்கலத்தில் பிளஸ் 2 படிக்கும் இவர், நேற்று முன் தினம் காலை பள்ளிக்கு சென்றபோது, ஆம்னி வேனில் நான்கு பேர் கடத்தினர். சிறிது நேரம் பயணத்திற்கு பின், மாணவரை மட்டும் வேனில் உட்கார வைத்துவிட்டு, ரோட்டோர ஓட்டலில் சாப்பிட்டனர். இதைப் பயன்படுத்தி தப்பித்த மாணவர், அவ்வழியே வந்த பஸ்சை நிறுத்தி மதுரை வந்தார்.

இதுகுறித்து ஓமலூர் போலீசாரிடம் மதுரை போலீசார் விசாரிக்க, 'மாணவர் தப்பித்த ரோட்டில், மதுரை பஸ் எதுவும் செல்லாதே' என்றுக்கூற, குழப்பம் ஏற்பட்டது. வேன் கதவைகளை பூட்டாமல் கடத்தல்காரர்கள் சாப்பிடச் சென்றது, ரூ.17க்கு டிக்கெட் எடுத்து மதுரை வந்ததாக மாணவர் கூறுவது எல்லாம் பொய் என தெரிந்துக்கொண்டு, தந்தை கண்ணனை போலீசார் வரவழைத்தனர். காதல் பிரச்னையால் வீட்டை விட்டு ஓடி வந்தது தெரியவந்தது. பின், மாணவர் நலன்கருதி, அவரை எச்சரித்து தந்தையுடன் போலீசார் அனுப்பி வைத்து கடத்தல் 'நாடகத்திற்கு' முற்றுப்புள்ளி வைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us