/உள்ளூர் செய்திகள்/கரூர்/அரசு கல்லூரிக்கு விளையாட்டு மைதானம்: மாணவர்கள் கோரிக்கைஅரசு கல்லூரிக்கு விளையாட்டு மைதானம்: மாணவர்கள் கோரிக்கை
அரசு கல்லூரிக்கு விளையாட்டு மைதானம்: மாணவர்கள் கோரிக்கை
அரசு கல்லூரிக்கு விளையாட்டு மைதானம்: மாணவர்கள் கோரிக்கை
அரசு கல்லூரிக்கு விளையாட்டு மைதானம்: மாணவர்கள் கோரிக்கை
ADDED : ஆக 08, 2011 02:52 AM
குளித்தலை: குளித்தலை அரசு கலைகல்லூரியில் தடுப்பு சுவர் மற்றும் விளையாட்டு மைதானம் அமைக்க மாணவ, மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை அடிவாரத்தில் சுமார் 22 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட அரசு கலைக்கல்லூரியை, கடந்த டிசம்பரில் திறக்கப்பட்டது. கல்லூரியில் ஐந்து பாடப்பிரிவுகள் நடத்தப்பட்டு வருகிறது. 780 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரி புதியதாக திறக்கப்பட்டாலும், தடுப்பு சுவர்கள் இல்லை. இதனால் கல்லூரி விடுமுறை நாட்களில் பகல் நேரத்திலும், நாள்தோறும் இரவு நேரங்களில் சட்டத்துக்கு புறம்பான செயல்கள் கல்லூரி வளாகத்தில் நடந்து வருகிறது. மேலும், கல்லூரியில் படிக்கும் கிராமப்புறத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளின் விளையாட்டு திறனை அதிகரித்து கொள்ள விளையாட்டு மைதானம் இல்லை. இதனால் பல்வேறு விளையாட்டு பிரிவில் திறமையுள்ள மாணவ, மாணவிகள் கல்லூரியில் படித்து வந்த போதிலும், முறையாக பயிற்சி எடுக்க முடியாத நிலையில் உள்ளனர். எனவே, குளித்தலை அரசு கலைக்கல்லூரியில் சமூக விரோத செயல்களை தடுக்க தடுப்பு சுவரும், விளையாட்டு திறமை வளர்த்து கொள்ள மைதானத்தையும் உடனடியாக அமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.


