வெற்றியை கொண்டாட ரோடு ஷோ தேவையில்லை: சொல்கிறார் இந்திய அணி பயிற்சியாளர்
வெற்றியை கொண்டாட ரோடு ஷோ தேவையில்லை: சொல்கிறார் இந்திய அணி பயிற்சியாளர்
வெற்றியை கொண்டாட ரோடு ஷோ தேவையில்லை: சொல்கிறார் இந்திய அணி பயிற்சியாளர்

புதுடில்லி: பலரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால், வெற்றிக்காக ரோடு ஷோ நடத்துவதில் தனக்கு ஒருபோதும் நம்பிக்கையில்லை என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.
பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது குறித்து அவர் கூறியதாவது: அனைத்தையும் விட உயிர் முக்கியமானது. எதிர்காலத்திலும் இதை சொல்வேன். எதிர்காலத்தில் ரோடு ஷோ நடத்தும் போது இன்னும் நாம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். வெற்றி கொண்டாட்டங்களை மூடிய கதவுகளுக்குள் அல்லது மைதானத்திற்குள் நடத்தலாம்.
உயிரிழந்தவர்கள் நினைவாக எனது எண்ணம் உள்ளது. எதிர்காலத்தில் இப்படி நடக்கக்கூடாது. பேரணியை நடத்தி இருக்கவும் கூடாது. என்னை பொறுத்தவரை ரோடு ஷோ நடத்தி இருக்கக்கூடாது.வெற்றிக்காக ரோடு ஷோ நடத்துவதில் தனக்கு ஒருபோதும் நம்பிக்கையில்லை. இவ்வாறு கவுதம் காம்பீர் கூறினார்.