Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் தேர்தல் பணிகளில் ஈடுபட அறிவுரை

உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் தேர்தல் பணிகளில் ஈடுபட அறிவுரை

உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் தேர்தல் பணிகளில் ஈடுபட அறிவுரை

உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் தேர்தல் பணிகளில் ஈடுபட அறிவுரை

ADDED : செப் 11, 2011 11:21 PM


Google News

தேனி : உள்ளாட்சி தேர்தலுக்கான, தேர்தல் நடத்தும் அலுவலகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் உடனடியாக தேர்தல் பணிகளில் ஈடுபடுமாறு கலெக்டர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தலுக்கு, தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தர்மசிவம் நியமிக்கப்பட்டுள்ளார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வார்டுவாரியாக 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். எட்டு ஊராட்சி ஒன்றியங்களுக்கும், அந்தந்த ஒன்றிய பி.டி.ஓ.,க்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்களாகவும், நகராட்சிகளுக்கு, நகராட்சி ஆணையர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். விரிவாக்க அலுவலர் நிலையில் உள்ளவர்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக உள்ளனர். 22 பேரூராட்சிகளுக்கும், பேரூராட்சி செயல் அலுவலர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களாகவும்,உதவியாளர் நிலையில் உள்ளவர்கள் உதவி அலுவலராகவும் செயல்படுவர். பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களுக்கு,பெரியகுளம் ஆர்.டி.ஓ., ஆண்டிபட்டிக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர்(வீடுகள் மற்றும் சுகாதாரம்), தேனிக்கு ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர்(உட்கட்டமைப்பு), சின்னமனூருக்கு உதவி திட்ட அலுவலர்(ஊதிய வேலைவாய்ப்பு), உத்தமபாளையத்திற்கு, ஆர்.டி.ஓ., உத்தமபாளையம், க.மயிலாடும்பாறைக்கு உதவி இயக்குனர்(தணிக்கை), கம்பத்திற்கு மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்(சுயவேலைவாய்ப்பு) ஆகியோர் தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 130 ஊராட்சிகளுக்கும் தலா ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வீதம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அனைவரும் உடனடியாக பணிகளில் ஈடுபட வேண்டும், என கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us