/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ஏரியில் கருவேல மரம் வெட்ட முயற்சி தடைசெய்ய கலெக்டருக்கு கோரிக்கைஏரியில் கருவேல மரம் வெட்ட முயற்சி தடைசெய்ய கலெக்டருக்கு கோரிக்கை
ஏரியில் கருவேல மரம் வெட்ட முயற்சி தடைசெய்ய கலெக்டருக்கு கோரிக்கை
ஏரியில் கருவேல மரம் வெட்ட முயற்சி தடைசெய்ய கலெக்டருக்கு கோரிக்கை
ஏரியில் கருவேல மரம் வெட்ட முயற்சி தடைசெய்ய கலெக்டருக்கு கோரிக்கை
ADDED : ஆக 01, 2011 03:49 AM
ராசிபுரம்: 'நீர் ஆதாரமாக விளங்கும் கருவேல மரங்களை வெட்டுவதை தடுக்க,
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, முனியப்பம்பாளையம் கிராம
மக்கள், மாவட்ட கலெக்டருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.அம்மனுவில்
கூறியிருப்பதாவது:ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை யூனியனுக்கு உட்பட்ட
வடுகம் முனியப்பம்பாளையத்தில், 19 ஏக்கர் பரப்பில் வெள்ளக்குட்டை ஏரி
உள்ளது. இந்த ஏரி முழுவதும் கருவேல மரங்கள் நிறைய வளர்ந்துள்ளது.
அவ்வப்போது பருவமழை பொய்த்து போனாலும், இந்த மரங்கள் ஏரிக்கு நீர் ஆதாரமாக
விளங்கி வருகிறது.மேலும், முனியப்பம்பாளையம் பகுதியில் உள்ள அனைத்து
கிணறுகளும், இந்த ஏரியின் நீர் ஆதாரத்தை நம்பியே உள்ளது. அதை பயன்படுத்தி
விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.இந்நிலையில், நாமகிரிப்பேட்டை
வட்டார வளர்ச்சி அதிகாரி ஆலோசனையின் படி, பஞ்சாயத்து தலைவர்,
'வெள்ளக்குட்டை ஏரியில் உள்ள கருவேல மரங்கள் அனைத்துயும் வெட்டலாம்' என,
தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.அதன்படி மரங்களை வெட்டுவதற்கு முயற்சி
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மரங்களை வெட்டுவதாக இருந்தால், மரங்களுக்கு எண்கள்
இட்டும், மரத்தின் அளவு குறிப்பிட்ட பிறகே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
அவற்றை முறையாக செய்யாமல், மரங்களை வெட்ட அனுமதி அளித்துள்ளது பல்வேறு
சந்தேகங்களை எழுப்பியுள்ளது.மேலும், உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால்,
அதற்குள் மரங்கள் அனைத்தும் வெட்டி காசு பார்த்துவிடலாம் என்ற எண்ணத்தில்,
இதில் கவனம் செலுத்துகின்றனர். அப்பகுதியில் வசித்து வருபவர்கள், ஏரியின்
நிலத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பு செய்ததால், 19 ஏக்கரில் காணப்பட்ட
வெள்ளக்குட்டை ஏரி, தற்போது சிறிய ஓடைபோல் காட்சி அளிக்கிறது.ஏரி மற்றும்
அதை சுற்றிய பகுதியில் உள்ள கிணத்தடி நீர் ஆதாரத்தை காக்க, மாவட்ட
நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.