டி.டி.எச்., சேவைக்கு 50 சதவீத கேளிக்கை வரி விதிக்க வலியுறுத்தல்
டி.டி.எச்., சேவைக்கு 50 சதவீத கேளிக்கை வரி விதிக்க வலியுறுத்தல்
டி.டி.எச்., சேவைக்கு 50 சதவீத கேளிக்கை வரி விதிக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 27, 2011 01:15 AM
மதுரை : 'தமிழகத்தில், டி.டி.எச்., சேவைக்கு, 50 சதவீத கேளிக்கை வரி விதிக்க வேண்டும்' என, மதுரை மாவட்ட கேபிள், 'டிவி' ஆபரேட்டர்கள் ஒருங்கிணைப்புக்குழு வலியுறுத்தியுள்ளது. மதுரையில் நடந்த கூட்டத்தில், ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஐயப்பன் தலைமை வகித்தார். ஒட்டுமொத்த கேபிள், 'டிவி' ஆபரேட்டர்களும் அரசு கேபிள், 'டிவி'யுடன் இணைதல்; தமிழகத்தில், டி.டி.எச்., சேவைக்கு வரி இல்லை. மகாராஷ்டிராவில், 50, கர்நாடகாவில், 25 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், அரசு கேபிள், 'டிவி' நல்ல முறையில் செயல்பட, டி.டி.எச்.,க்கு, 50 சதவீத கேளிக்கை வரி விதிக்க வேண்டும்.
கேபிள், 'டிவி' ஆபரேட்டர்களிடமிருந்து அபகரிக்கப்பட்டிருக்கும், கேபிள் இணைப்புகளையும், சன், 'டிவி' நிறுவனத்தால், 'பாக்ஸ்' கொடுக்காமல், அதே சமயத்தில் பறிக்கப்பட்ட கேபிள் இணைப்புகளையும் மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். டிஜிட்டல் கன்ட்ரோல் ரூம் அமைத்து, செட்டாப் பாக்சை அரசு மானிய விலையில் வழங்குவதுடன், சேனல்களை பேக்கேஜ் முறையில் கொடுத்து, கேபிள், 'டிவி' தொழிலை பாதுகாக்க வேண்டும். கேபிள், 'டிவி' நலவாரியத்தை புதுப்பித்து, தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உட்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசு கேபிள், 'டிவி' ஒளிபரப்பாளர்கள் சங்க மாநில தலைவர் யுவராஜ், ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் லங்காராம், செந்தில்குமார், விஜயன் பங்கேற்றனர்.