/உள்ளூர் செய்திகள்/திருச்சி/வேட்பாளர் பட்டியல் "ரிலீஸ்' ரத்து ஸ்டாலின் திடீர் சென்னை பயணம்வேட்பாளர் பட்டியல் "ரிலீஸ்' ரத்து ஸ்டாலின் திடீர் சென்னை பயணம்
வேட்பாளர் பட்டியல் "ரிலீஸ்' ரத்து ஸ்டாலின் திடீர் சென்னை பயணம்
வேட்பாளர் பட்டியல் "ரிலீஸ்' ரத்து ஸ்டாலின் திடீர் சென்னை பயணம்
வேட்பாளர் பட்டியல் "ரிலீஸ்' ரத்து ஸ்டாலின் திடீர் சென்னை பயணம்
ADDED : செப் 27, 2011 11:47 PM
திருச்சி: திருச்சி வந்த ஸ்டாலின், வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதை ரத்து
செய்துவிட்டு, திடீரென சென்னை புறப்பட்டுச் சென்றார்.
திருச்சியில், மேற்கு
தொகுதி இடைத்தேர்தலுக்கான தி.மு.க., தேர்தல் அலுவலகம் திறப்புவிழா, மாவட்ட
செயல்வீரர்கள் கூட்டத்தில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் நேற்று கலந்து
கொண்டார். உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் பட்டியலை
மாலை சங்கம் ஹோட்டலில் ஸ்டாலின் வெளியிடுவதாக அனைத்து
பத்திரிக்கையாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, அந்த
பட்டியலில் செல்வராஜ் ஆதரவாளர், முன்னாள் எம்.எல்.ஏ., சேகரன் ஆதரவாளர்
பெயர்கள் இடம் பெறவில்லை என்ற தகவல் பரவியது. இதனால், இவர்களது ஆதரவாளர்கள்
ஆர்பாட்டம் நடத்தப்போவதாக தகவல் தெரியவந்தது. இதையடுத்து, பிரச்சனைகளை
தவிர்க்கவும், குழப்பம் ஏற்படாமல் இருக்கவும் உள்ளாட்சித்தேர்தல் தி.மு.க.,
வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதை ஸ்டாலின் திடீரென ரத்து செய்தார். நேற்று
இரவு திருச்சியில் தங்கிவிட்டு, இன்று காலை தான் சென்னை செல்வதாக இருந்தது.
இப்பிரச்னையால், கடுப்பான ஸ்டாலின், திடீரென நேற்று மாலையே சென்னை
புறப்பட்டார். சங்கம் ஹோட்டலில் இருந்து வெளியே வந்த ஸ்டாலின் முகம்
மிகவும் 'கடுகடு'ப்பாக காணப்பட்டது. பத்திரிக்கையாளர்கள் அவரிடம் பேட்டி
கேட்க முயன்றனர். ஆனால், யாரையும் கவனிக்காததது போல, காரில் ஏறிச்
சென்றார். 'யூனியன் வார்டு கவுன்சிலர்களுக்கான பட்டியல் வெளியாகும்' என்ற
தகவலால் கட்சியினர் சங்கம் ஹோட்டல் முன் கூடியிருந்தனர். திடீரென பட்டியல்
வெளியாவது ரத்து செய்யப்பட்டதால், அனைவரும் ஏமாற்றமடைந்தனர். பட்டியல்
சென்னையில் வெளியிடப்படுவதாக கட்சியினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால்,
கட்சியினர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.