/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஆடு பலியிட்டு காங்கேயம் யூனியனில் பூஜைஆடு பலியிட்டு காங்கேயம் யூனியனில் பூஜை
ஆடு பலியிட்டு காங்கேயம் யூனியனில் பூஜை
ஆடு பலியிட்டு காங்கேயம் யூனியனில் பூஜை
ஆடு பலியிட்டு காங்கேயம் யூனியனில் பூஜை
ADDED : செப் 14, 2011 01:11 AM
காங்கேயம்: காங்கேயத்தில் புதிய பஞ்சாயத்து யூனியன் அலுவலக கட்டிடத்தில் நேற்று அதிகாலை நடந்த பூஜையில், ஆட்டுக்கிடா பலியிடப்பட்டு, கட்டிடம் முழுவதும் அதன் ரத்தம் தெளிக்கப்பட்டது.காங்கேயத்தில் தாராபுரம் ரோட்டில் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் செயல்படுகிறது.
நீண்ட காலமாகவே சிமென்ட் பெயர்ந்த ஓட்டுக் கட்டிடத்தில் இயங்கியது. பி.டி.ஓ.,க்கள் ஜீப் நிறுத்த இடமிருந்தும், நிறுத்த வழியில்லாமல் தவித்தனர். அலுவலகத்துக்கு முன்புற வாயிலில் கேட் கூட இல்லாதிருந்தது. மழையில் ஒழுகும் பழைய கட்டிடத்தை சீரமைக்க, சென்றாண்டு திட்டமிடப்பட்டது.மேற்கூரை ஓடுகள், மரச் சட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டது. சுவர் பெயர்ந்த இடங்களில் சிமென்ட் பூசப்பட்டு, சீரமைக்கப்பட்டது. அலுவலக வாயிலில் கான்கிரீட் அலங்கார வளைவு அமைக்கப்பட்டு, அதன்மீது, காங்கேயத்துக்கு புகழ்பெற்ற காளை சிலைகள் அமைக்கப்பட்டன. பி.டி.ஓ., கார் நிறுத்த போர்ட்டிக்கோ கட்டப்பட்டது. அலுவலகம் முழுவதும் தரைத்தளம், சுவர்களில் டைல்ஸ் கற்கள் ஒட்டப்பட்டு, அலுவலகம் முழுவதும் மிளிர்கிறது.கரடு முரடாக இருந்த அலுவலகத்தின் முன்பகுதியில் முழுவதும் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு, ஜீப் மற்றும் வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 20 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. டைல்ஸ் கற்களும், அலுவலக சுவர்களும், முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிடித்த பச்சை நிறத்துக்கு மாறின.புதிய கட்டிடத்தை, சென்ற வாரம் எம்.எல்.ஏ., நடராஜ் திறந்து வைத்தார். உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள், மாவட்ட கலெக்டர் கூட்டம், திட்டப் பணிகள் என, தொடர்ந்து அதிகாரிகள், 'பிஸி'யாக இருந்தனர். பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர்களின் பதவிகாலம் முடிவதை அடுத்து, நேற்று முன்தினம் தற்போதைய யூனியன் கவுன்சிலில் கடைசி கூட்டம் நடந்தது.நேற்று அதிகாலை 4.30 மணிக்கு புதிய கட்டிடத்தில் திருஷ்டி கழிப்பு பூஜை நடந்தது. ஆட்டுக்கிடா பலி கொடுக்கப்பட்டது. அதன் ரத்தம் அனைத்து இடங்களிலும் தெளிக்கப்பட்டது. பூஜைக்கு பின், மட்டன் பிரியாணி தயாரானது. அலுவலக ஊழியர்கள், ஒப்பந்ததாரர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது.