Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/மாற்று திறன் குழந்தைகளுக்கு சிறப்பு மருந்துவ முகாம்

மாற்று திறன் குழந்தைகளுக்கு சிறப்பு மருந்துவ முகாம்

மாற்று திறன் குழந்தைகளுக்கு சிறப்பு மருந்துவ முகாம்

மாற்று திறன் குழந்தைகளுக்கு சிறப்பு மருந்துவ முகாம்

ADDED : செப் 03, 2011 12:18 AM


Google News

கிருஷ்ணகிரி: பர்கூர் வட்டார வளமையத்தில் நடந்த மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில், 336 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்து வருகிறது. நேற்று (செப்., 2) காவேரிப்பட்டணம் வட்டார வள மையத்திலும், 5ம் தேதி சூளகிரி வட்டார வள மையத்திலும், 6ம் தேதி மத்தூர், 9ம் தேதி வேப்பனப்பள்ளி, 12ம் தேதி தளி, 13ம் தேதி ஓசூர் வட்டார வள மையங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது.



பர்கூர் வட்டார வள மையத்தில் நடந்த மருத்துவ முகாமை அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் பாஸ்கரன் முகாமை துவக்கி வைத்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் ரங்கநாதன் முன்னிலை வகித்தார். முகாமில், பார்வை குறைபாடு உடைய 52 பேர், செவித்திறன் பாதிப்பு உடைய 67 பேர், மனவளர்ச்சி குறைபாடு உடைய 92 பேர், கை கால் குறைபாடு உடைய 125 பேர் என மொத்தம் 336 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.



சிறப்பு மருத்துவ குழுவினர் மாணவ, மாணவிகளை பரிசோதித்து சக்கர நாற்காலி, மூன்று சக்கர வண்டி, காதொலி கருவி, அறுவை சிகிச்சை பெற, கண் கண்ணாடி பெற பரிந்துரைத்தனர். கல்வி உதவித்தொகை விண்ணப்பம், பராமரிப்பு நிதி விண்ணப்பம், இலவச பயண சலுவை விண்ணப்பம், பஸ் பாஸ், ரயில் பாஸ், 75 சதவீத கட்டண சலுகை ஆகியவை வழங்கப்பட்டது. புதியதாக 39 அடையாள அட்டைகளும், 27 பேர் நல வாரிய உறுப்பினராகவும் சேர்க்கப்பட்டனர். ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், ஆசிரியர் பயிற்றுனர் கோவிந்தசாமி, சிறப்பாசிரியர்கள் அருண்குமார், ஜெயசங்கரி, விஜயன், அமலா, பிசியோதெரபிஸ்ட் ஜான் டைட்டஸ் மற்றும் சமுதாயம் சார்ந்த மறுவாழ்பு பணியாளர்கள் செய்திருந்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us