Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/பல்கலை ஆசிரியர் சங்கம் தொடர் உண்ணாவிரதம்

பல்கலை ஆசிரியர் சங்கம் தொடர் உண்ணாவிரதம்

பல்கலை ஆசிரியர் சங்கம் தொடர் உண்ணாவிரதம்

பல்கலை ஆசிரியர் சங்கம் தொடர் உண்ணாவிரதம்

ADDED : செப் 24, 2011 12:55 AM


Google News
தஞ்சாவூர்: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம் பனகல் கட்டிடம் முன் பல்கலை ஆசிரியர் சங்கம் சார்பில் மண்டல தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் ஈரோடு மாவட்ட மண்டல செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தார். தஞ்சாவூர் கரந்தை தமிழ்வேள் உமாமகேசுவரனார் கரந்தை கல்லூரி, நிர்வாகத்தின் தற்போதைய செயலாளர், கல்லூரி முதல்வர் ஆகியோரால் சீரழிக்கப்பட்டு வருகிறது. நூறு விழுக்காடு அரசு நிதியில் இக்கல்லூரியின் செயலாளர் ராமநாதன் பணி மூப்பில் மிகவும் இளையவரான தன் மகளை கல்லூரியின் முதல்வராகவும், மருமகளை மாலை நேர கல்லூரியின் பாதுகாவலராகவும், தனது மகனை துணை தலைவராகவும் ஆக மொத்தத்தில் குடும்ப சொத்தாக மாற்றியுள்ளார். மேலும் மாணவர்களிடம் அதிக கல்வி கட்டணம் வசூல் செய்தல், கல்லூரி வளாகத்தில் மாட்டுப் பண்ணை அமைத்து நடத்துதல், கல்லூரி வளாகத்தில் தனியார் பஸ்களை நிறுத்துதல், கல்லூரி வளாகத்தில் பஸ் அலுவலகம் நடத்துதல், ஆசிரியர் மாணவர்களை தொடர்ந்து பழிவாங்குதல் பல்வேறு பிரச்னைகளில் இருந்து கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பாதுகாத்திட தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்கலை ஆசிரியர் சங்கம் சார்பில் மண்டல அளவிலான தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us