/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மோட்டார் பைக்கிளில் டில்லி வரை பாகபம் பெய்ய மெக்கானிக் முடிவுமோட்டார் பைக்கிளில் டில்லி வரை பாகபம் பெய்ய மெக்கானிக் முடிவு
மோட்டார் பைக்கிளில் டில்லி வரை பாகபம் பெய்ய மெக்கானிக் முடிவு
மோட்டார் பைக்கிளில் டில்லி வரை பாகபம் பெய்ய மெக்கானிக் முடிவு
மோட்டார் பைக்கிளில் டில்லி வரை பாகபம் பெய்ய மெக்கானிக் முடிவு
ADDED : ஆக 14, 2011 02:49 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் இருந்து டில்லிக்கு, மோட்டார் சைக்கிளில்
புதுமையான முறையில் சாகச பயணம் மேற்கொள்ள புதுச்சேரி மெக்கானிக்
திட்டமிட்டுள்ளார்.இதுகுறித்து, அசிஸ்டு வேல்டு ரெக்கார்ட்ஸ் ரிசர்ச்
பவுண்டேஷன் நிறுவனர் ராஜேந்திரன், நிருபர்களிடம் கூறியதாவது:
வீராம்பட்டினத்தை சேர்ந்த மெக்கானிக் குணசீலன், மோட்டார் சைக்கிளை கைகளை
மாற்றிப் பிடித்து, வித்தியாசமாக ஓட்டுவதற்கு பயிற்சி பெற்றுள்ளார்.
அதாவது, மோட்டார் சைக்கிளின் வலது ஹேண்ட் பாரை இடது கையாலும், இடது ஹேண்ட்
பாரை வலது கையாலும் பிடித்தபடி ஓட்டுவார். இந்த முறையில் புதுச்சேரியில்
இருந்து டில்லிக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு சாதனை புரிய
முடிவு செய்துள்ளார்.
புதுச்சேரியில் இருந்து டில்லிக்கு சென்று,
அங்கிருந்து புதுச்சேரி திரும்ப உள்ளார். 4800 கிலோ மீட்டர் தூரத்தை 6
நாட்களில் பைக்கில் கடக்க திட்டமிட்டுள்ளார். இந்த சாதனை பயணத்தின் துவக்க
விழா வரும் 21ம் தேதி காலை 10 மணிக்கு, கடற்கரை காந்தி சிலை அருகில்
நடக்கிறது. சாதனை பயணத்தை முதல்வர் ரங்கசாமி கொடியசைத்து துவக்கி
வைக்கிறார். சபாநாயகர் சபாபதி, அமைச்சர் கல்யாணசுந்தரம் கலந்து
கொள்கின்றனர். புதுச்சேரியில் இருந்து புறப்படும் குணசீலன், பெங்களூரு,
ஐதராபாத், நாக்பூர், ஜான்சி வழியாக டில்லியை அடைகிறார். பின், இதே வழியாக
புதுச்சேரி திரும்புகிறார். இவ்வாறு ராஜேந்திரன் கூறினார். குணசீலன்
உடனிருந்தார்.