ADDED : ஆக 05, 2011 12:11 AM
சென்னை: தமிழக அரசின் பட்ஜெட்டில் குறித்து, தமிழக காங்., கமிட்டி தலைவர் தங்கபாலு வெளியிட்ட அறிக்கை: தேர்தல் வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றுவதில், அதிகக் கவனம் செலுத்துவதை பட்ஜெட்டில் அறிய முடிகிறது.
தமிழ் மொழி வளர்ச்சிக்கு, போதிய நிதி ஒதுக்கவில்லை. விவசாயிகளின் நலன்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின், அனைவருக்கும் கல்வித் திட்டம், தமிழகத்தில் சிறப்பாகச் செயல்பட, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு, தமிழக கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.