/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கற்குடியில் விவசாயிகள் பயிற்சி முகாம்கற்குடியில் விவசாயிகள் பயிற்சி முகாம்
கற்குடியில் விவசாயிகள் பயிற்சி முகாம்
கற்குடியில் விவசாயிகள் பயிற்சி முகாம்
கற்குடியில் விவசாயிகள் பயிற்சி முகாம்
செங்கோட்டை :செங்கோட்டை வட்டாரம் கற்குடி கிராமத்தில் நெல் பயிரில் பண்ணை கல்வி கூட பயிற்சி முகாம் வேளாண்மை இணை இயக்குனர் தேவசகாயம் தலைமையில் நடத்தப்பட்டது.பண்ணை கல்வி கூடத்தில் 25 விவசாயிகள் தேர்வு செய்து அவர்களுக்கு 6 கட்ட பயிற்சி நடத்தப்படும்.
பயிற்சியில் நெல்லை வேளாண்மை உதவி இயக்குனர் தேவசகாயம், உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் அழகர்சாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலசுப்பிரமணியன், வேளாண்மை உதவி இயக்குனர் வெங்கடகிருஷ்ணன் பயிற்சியளித்தனர்.பயிற்சியின் போது, திருந்திய நெல் சாகுபடி முறையில் ஏக்கருக்கு 3 கிலோ நெல் போதுமானதாகும். 1 ஏக்கருக்கு நடவு செய்ய 1 சென்ட் நாற்று போதுமானதாகும். நாற்றை 9-15 நாட்களிலேயே நடவு செய்திடலாம் என்றும், நடும் பொழுது ஒற்றை நாற்று முறையில் 25க்கு 25 இடைவெளியில் நடவு செய்திட வேண்டும் என்றும் அலுவலர்கள் தெரிவித்தனர்.ஏற்பாடுகளை துணை வேளாண்மை அலுவலர் சுப்பிரமணியன், உதவி விதை அலுவலர்கள் வரதராஜன், பரமசிவம், உதவி வேளாண்மை அலுவலர் சிக்கந்தர் அமீன் செய்திருந்தனர். இத்தகவலை வேளாண்மை உதவி அலுவலர் வெங்கடகிருஷ்ணன் தெரிவித்தார்.