/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/சவுதி அரேபியாவில் பணியாற்ற விருப்பமா? டாக்டர் மருத்துவ பணியாளருக்கு அழைப்புசவுதி அரேபியாவில் பணியாற்ற விருப்பமா? டாக்டர் மருத்துவ பணியாளருக்கு அழைப்பு
சவுதி அரேபியாவில் பணியாற்ற விருப்பமா? டாக்டர் மருத்துவ பணியாளருக்கு அழைப்பு
சவுதி அரேபியாவில் பணியாற்ற விருப்பமா? டாக்டர் மருத்துவ பணியாளருக்கு அழைப்பு
சவுதி அரேபியாவில் பணியாற்ற விருப்பமா? டாக்டர் மருத்துவ பணியாளருக்கு அழைப்பு
ADDED : ஆக 07, 2011 01:47 AM
அரியலூர்: சவுதி அரேபியாவில் பணியாற்றிட, டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம்.அரியலூர் மாவட்ட கலெக்டர் அனு ஜார்ஜ் விடுத்த அறிக்கை: சவுதி அரேபியா அமைச்சகம் சார்பில் அங்கு செயல்படும் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்களில் பணியாற்றிட, அனைத்து பிரிவு பொது மருத்துவம், அறுவை சிகிச்சை பிரிவு, ரேடியாலஜி, பாத்தாலஜி, பல் மருத்துவம், தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் ஆலோசகர்கள், சிறப்பு மருத்துவர்கள், மற்றும் இருப்பிட மருத்துவர்கள் உடனடியாக தேவைப்படுகிறார்கள்.
இவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுகுழு, வரும் 2011 செப்டம்பர் மாதம் இந்தியர்களை தேர்வு செய்ய உள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் டாக்டர்களுக்கு அவர்களின் கல்வி தகுதி மற்றும் அனுபவத்துக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும். மேலும் இலவச விசா, விமான டிக்கெட், இலவச இருப்பிட வசதி, குடும்ப விசா மற்றும் இதர சலுகைகள், வெளிநாடு வேலையளிப்போரால் வழங்கப்படும். மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதி தேர்வுக்கு பிறகு, இரண்டு வருட வேலை அனுபவம் உள்ள 55 வயது கன்ஸல்டிங் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள், தங்களின் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன், கல்வி அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகலுடன், ஒரு ஃபோட்டோவை இணைத்து, டபிள்யூ டபிள்யூ டபிள்யூ. ஓஎம்சிமேன்பவர்.காம் எனும் ஈமெயில் மூலமாக வரும் 20ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்கள் அறிய மேற்கண்ட இணையதள முகவரியிலோ அல்லது 044-24464268/ 24464269 ஆகிய டெலிபோன் எண்களை தொடர்பு கொண்டோ அறிந்து கொள்ளலாம்.